பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் கில்லஸ்பி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தனது பங்கு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்த பின்னர் அதன் பிறகு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடிய நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற பாகிஸ்தான் அணி அதற்குப் பிறகு அதிரடியான மாற்றங்களை செய்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணித்தேர்வு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கில்லஸ்பி தற்போது தான் பாகிஸ்தான் அணியின் ஒரு பயிற்சியாளர் மட்டுமே என்றும் தேர்வு விஷயங்களில் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தி இருக்கிறார். வெள்ளைப் பந்து பயிற்சியாளர் கிர்ஸ்டன் மற்றும் சிவப்பு பந்து பயிற்சியாளர் கில்லஸ்பி ஆகியோர் பயிற்சியாளர் மட்டுமல்லாமல் தேர்வு குழு விஷயங்களிலும் கலந்து கொள்ள உரிமை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நிராகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்வு முடிவுகளில் நான் கலந்து கொள்வதில்லை
இது குறித்து ஜேசன் கில்லஸ்பி கூறும் பொழுது “இப்போது நான் மேட்ச் வியூகத்திற்கான பயிற்சியாளராக மட்டுமே இருக்கிறேன். எனவே நான் தற்போது மற்ற விஷயங்களை தவிர்த்து வீரர்களின் மீது கவனம் செலுத்தி அவர்களை கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்தும் வேலையை செய்து வருகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வு குழு அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது
இதையும் படிங்க:140 ரன்.. ஆயுஸ் பதோனி அட்டகாசம்.. செமி பைனலில் கெத்தாக நுழைந்த இந்திய அணி.. ஒமான் அணி தோல்வி.. எமர்ஜிங் ஆசியா கப் 2024
எனவே அவர்கள் தான் தற்போது முடிவெடுப்பதில் ஈடுபடுகிறார்கள் தவிர நான் எந்த முடிவையும் எடுப்பதில்லை” என்று திட்டவட்டமாக பேசியிருக்கிறார். இருப்பினும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியின் கேப்டன் ஷான் மசூத் மற்றும் பயிற்சியாளர் கில்லெஸ்பி ஆகியோர் தேர்வு விஷயங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சந்திக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






