140 ரன்.. ஆயுஸ் பதோனி அட்டகாசம்.. செமி பைனலில் கெத்தாக நுழைந்த இந்திய அணி.. ஒமான் அணி தோல்வி.. எமர்ஜிங் ஆசியா கப் 2024

0
1169
Badoni

தற்போது வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தங்கள் பிரிவில் இடம்பெற்று இருக்கும் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ என இரண்டு அணிகளையும் வென்று ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில் லீக் சுற்றும் கடைசி போட்டியில் இன்று ஓமான் அணியை எதிர்கொண்டது.

- Advertisement -

சவால் கொடுத்த ஓமான்

இந்த போட்டியில் டாஸ் வென்ற உமா அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. அதே சமயத்தில் இந்திய அணியில் பிரப்சிம்ரன் சிங், அன்சூல் காம்போஜ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சாய் கிஷோருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பேட்டிங் செய்த ஓமான் பணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் 20 ஓவர்களில் குவித்தது. அந்த அணிக்கு முகமது நதிம் 49 பந்தில் 41, வாசிம் அலி 28 பந்தில் 24 ரன்கள், ஹமாத் மிர்சா 15 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். இந்திய பந்துவீச்சில் அக்கிப் கான், ராசிக் சலாம், நிஷாந்த் சிந்து மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ஆயுஸ் பதோனி அதிரடி பேட்டி

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் 11 பந்தில் 8 ரன்கள், அபிஷேக் சர்மா வழக்கம் போல அதிரடியாக 15 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி பவர் பிளேயரில் ஓவருக்கு ஒன்பது ரன்களுக்கு மேல் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆயுஸ் பதோனி 25 பந்தில் அரைசதம் அடித்து 27 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் திலக் வர்மா 30 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 133 ரன்ஸ்.. 309 ஸ்ட்ரைக் ரேட்.. ரோகித் சர்மாவின் அதிவேக சத சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா.. டி20 கிரிக்கெட்

இந்த தொடரில் ஏ பிரிவில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தல ஒரு போட்டியை தோற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பி பிரிவில் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு ஒரு போட்டியில் தோற்று தகுதி பெற்றது. இதில் இந்திய அணி மட்டுமே லீக் போட்டியில் மூன்று போட்டிகளையும் வென்று தோல்வி அடையாமல் அரையிறுதியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -