நாளை இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கலந்து கொண்டு இந்திய வீரர்கள் குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது இந்தியா வந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. புதிய உலகத்தை சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு 2 அணிகளுக்குமே இது முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது.
எதிர்காலத்திற்கான வீரர்
இதுகுறித்து டெம்பா பவுமா பேசும் பொழுது “நான் தென் ஆப்பிரிக்க ஏ அணியில் ஒரு பகுதியாக சமீபத்தில் இருந்தேன். பெங்களூருவில் உள்ள சென்டர் ஆப் எக்ஸலண்ட்ஸ் மைதானத்தில் நான்கு நாள் கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். அங்கு எனக்கு துருவ் ஜுரலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் விளையாடுவதை பார்க்கும் பொழுது அற்புதமான பேட்ஸ்மேனாக இருக்கிறார்”
“அவர் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்தவர். நல்ல தீவிரத்துடன் பேட்டிங் செய்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை பொருத்தவரையில், இவர் தொடர்ந்து வளர்ந்தால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தில் ஒரு பெரிய பங்கை வகிப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு உற்சாகமான இளம் சர்வதேச வீரர்”
கில் செய்தது சாதாரணமில்லை
“இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு உற்சாகமான நேரம். ரோகித் சர்மா மாதிரியான ஒரு கேப்டனின் இடத்தை நிரப்புவதற்கு சுப்மன் கில் வந்திருக்கிறார். ரோகித் சர்மா செய்வதை செய்ய இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க : என்னுடைய இடத்தில் ஆடும் சாய்.. உடனடியா இதை செய்யணும்.. இல்லனா வேறவங்க வந்துருவாங்க – புஜாரா அறிவுரை
“கில் ஒரு கேப்டனாக எப்படி தொடங்கி இருக்கிறார் என்று பாருங்கள். நேரடியாக இங்கிலாந்து சென்று அங்கு ரன்கள் எடுப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அவரால் அதைச் செய்ய முடிந்திருப்பது அவரது கேப்டன்ஷியில் அற்புதமான விஷயமாக அமைந்திருக்கிறது. மேலும் அவர் இன்னும் வளருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.






