என்னுடைய இடத்தில் ஆடும் சாய்.. உடனடியா இதை செய்யணும்.. இல்லனா வேறவங்க வந்துருவாங்க – புஜாரா அறிவுரை

0
53
Pujara

இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடும் இளம் வீரர் சாய் சுதர்சனின் இடம் உறுதியானதாக இல்லை என புஜாரா எச்சரிக்கை செய்திருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் இரண்டு அரை சதங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் அவர் ஆட்டம் இழந்தது மிகவும் சாதாரண முறையில் இருந்தது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

அவரால் செய்ய முடியும்

இதுகுறித்து இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் விளையாடிய புஜாரா பேசும் பொழுது “தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் சாய் சுதர்சனுக்கு மிக முக்கியமான ஒரு தொடராக இருக்கும். அவர் மிக வேகமாக முதிர்ச்சி அடைந்து வரும் ஒரு இளம் வீரர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொஞ்சம் ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தன்னால் ரன்கள் எடுக்க முடியும் என்று அவர் காட்டியிருக்கிறார்”

“அதே சமயத்தில் இங்கிலாந்தில் சாதாரணமான முறையில் அவர் ஆட்டம் இழந்தார். எனவே அவர் விக்கெட்டை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் தனக்கு கிடைக்கும் தொடக்கத்தை பெரிதாக மாற்ற வேண்டும். மேலும் அவர் முதல் சதத்தை அடித்தவுடன் நல்ல நம்பிக்கை பெறுவார் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

இவரால் பிரச்சனை வரும்

“இது அவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவது பற்றியது மட்டுமே இல்லை. அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது பற்றியது. அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யலாம் இல்லை அணிக்கு தேவை என்றால் வேறு இடத்தில் வந்து கூட பேட்டிங் செய்யலாம். ஆனால் இப்போது நிலைமைகளை பார்த்தால் அவர் நிச்சயம் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று தெரிகிறது”

இதையும் படிங்க: சேவாக் சாதனைக்கு குறி வைத்த ரிஷப் பண்ட்.. கில் படைக்க இருக்கும் மெகா ரெக்கார்டுகள்.. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்

“தற்போது துருவ் ஜுரல் சிறந்த திறமைகளை வெளி காட்டிய வீரராக இருக்கிறார். அவர் தொடர்ந்து ரன்கள் எடுக்கும் பொழுது சாய் சுதர்சனின் இடம் மாறலாம் அல்லது இடம் பறிபோகலாம். ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஆக அவர் மூன்றாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தென் ஆப்பிரிக்க தொடரில் முதல் சதத்தை பெறுவார் என்று நம்புகிறேன். இதன் மூலம் நம்பிக்கை பெற்று நிறைய ரன்கள் எடுப்பார் என்றும் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -