“நீங்க பைனலில் தோற்கற ஆளுங்கனு சொல்லி.. கோலியை வம்பிழுங்க” – இங்கிலாந்து பனேசர் சர்ச்சை பேச்சு

0
87
Virat

இறுதியாக இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற அணியாக இங்கிலாந்து இருக்கிறது. அவர்கள் 2012 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் இரண்டுக்கு ஒன்று என அலைஸ்டர் குக் தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றினார்கள்.

அதற்குப் பிறகு இந்திய அணி உள்நாட்டில் எந்த டெஸ்ட் தொடரையும் இதுவரையில் இழக்கவில்லை. மேலும் பொதுவாக இந்தியாவை சொந்த நாட்டில் வீழ்த்துவது கடினம். டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவது எல்லாவற்றையும் விட கடினம்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். எனவே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் தனிப்பட்ட முறையில் பெரிய தொந்தரவாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

பொதுவாகவே இங்கிலாந்து விராட் கோலி இடம் களத்தில் ஏதாவது செய்து கொண்டே இருக்கும். பதிலுக்கு விராட் கோலி திருப்பி இங்கிலாந்து அணிக்கு ஏதாவது செய்வார். இதனால் இந்தியா இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் எப்பொழுதும் அனல் பறக்கும்.

ஆனாலும் இந்த முறை பல முன்னால் வீரர்கள் விராட் கோலி உடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் கூடாது, அது அவரை உந்துதல்ப்படுத்தி ரன்கள் அடிக்க வைத்து விடும் என இங்கிலாந்து அணியை எச்சரித்து வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்கு மாறாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் இங்கிலாந்து வீரர்கள் விராட் கோலியை மோசமாக சீண்ட வேண்டும் என்று கூறியதோடு, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இது குறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலியின் ஈகோவுடன் விளையாடி மனரீதியாக அவரை பின் நிறுத்த வேண்டும். உதாரணமாக அவரை சீண்டுவதற்கு ‘நீங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தால் சோக்கர்ஸ்’ என்பது போல கூற வேண்டும்.

மேலும் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறார். இதை வைத்தும் அவர்களை சீண்ட வேண்டும். இது குறிப்பாக விராட் கோலியை மனதளவில் சீற்றம் அடைய வைக்கும்.

இந்த மாதிரி விராட் கோலியின் விக்கட்டை அதிக முறை கைப்பற்ற கூடியவராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் ரிவர்ஸ் ஸ்விங் முறையில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.