“ரோகித்த வெளிய போக சொல்றிங்களா?.. அதெல்லாம் நடக்காது!” – இந்திய முன்னாள் வீரர் சீற்றம்!

0
3399
Rohit

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. தற்பொழுது அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையை நோக்கி காத்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பைக்கு எப்படியான இந்திய அணி அமையும்? என்பது தற்போது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இளம் வீரர்கள் விளையாடுகிறார்களா? இல்லை இவர்கள்தான் அடுத்த வருட உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்களா? என்பது குறித்து தெளிவில்லை.

- Advertisement -

மேலும் கடந்த வருடங்களில் இருந்தே ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் தொடர்ச்சியாக விளையாடாமல் இருந்து வந்தார்கள்.

அடுத்து ரோகித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவங்களில் விளையாட விரும்பவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் விளையாடுவது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய வாரியம் எச்சரிக்கையாக பேசி வருகிறது. இப்படியான காரணங்களால் இந்த விஷயத்தில் இழுபறி நிலைமையே நீடித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” ரோகித் சர்மா கேப்டனாக வருவார் என்று நான் உணர்கிறேன். ரோகித்துக்கு அடுத்து ராகுல் இருக்கிறார் என்றாலும் கூட, இப்பொழுது உடனே ரோஹித் சர்மாவை எங்காவது போய் விட சொல்லிவிட முடியுமா? ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார். மேலும் டி20 உலகக்கோப்பைக்கும் அவரேதான் கேப்டனாக இருப்பார்.

- Advertisement -

மேலும் அவர் ஐபிஎல் தொடரில் கொஞ்சம் நல்ல ஃபார்மில் இருந்தால் இதுதான் நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் கொஞ்சம் சுதந்திரமாக விளையாட விரும்புவார். ரோகித் சர்மா கேப்டனாக இருக்க விராட் கோலி மூன்றாம் இடத்தில் மட்டுமே விளையாடுவார்.

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை விளையாடிய அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. அவர்கள் தான் 2024 டி20 உலகக்கோப்பையிலும் விளையாடப் போகிறார்கள். இவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது ஒரு பிரச்சனைதான். ஆனால் அணி மாறாது என்பதுதான் நான் சொல்வது. ஏனென்றால் அவர்கள் சமீபத்தில் சிறப்பாக உலகக் கோப்பையிலும் ஆசியக் கோப்பையிலும் விளையாடி இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!