இலங்கை இந்திய தொடர்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்லை.. எந்த சேனல்.?.. போனில் எங்கு பார்க்கலாம்.. முழு விபரம்

0
1447

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் இடம்,நேரம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சி உரிமம் குறித்த விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கையில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கு பெற உள்ளது. டி20 ஃபார்மெட்டில் ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வினை அறிவித்து இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய சீனியர் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர். மேலும் பல இளம் வீரர்களும் இந்த தொடரில் இடம் பெற்றிருக்கிறார்கள். கௌதம் கம்பீர் தலைமையில் பங்கு பெறும் முதல் தொடர் என்பதால் இந்தத் தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேபோல ஒரு நாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் திரும்பி இருக்கின்றனர். ரோகித் சர்மா கேப்டனாக தொடர இருக்கிறார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டுக்குமே சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் டி20 போட்டி வருகிற 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பல்லேகலேவில் நடைபெற உள்ளது. அதற்கடுத்த இரண்டு போட்டிகளும் 28 மற்றும் 30ஆம் தேதிகளில் அதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

- Advertisement -

அதற்கு அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் அனைத்துமே சோனி ஸ்போர்ட்ஸ் 10 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 ஆங்கிலத்திலும், சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 இந்தியிலும் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 சேனல்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:இலங்கை டி20.. நாளை உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கம்பீரின் முதல் படை.. யாருக்கு வாய்ப்பு?

அதுமட்டுமல்லாமல் சோனி லைவ் மொபைல் ஆப்பில் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இலங்கை அணியும் தற்போது புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என களமிறங்குவதால் இந்த தொடரை வெல்ல இலங்கை அணியும் தீவிர முனைப்பு காட்டும் என்பது சந்தேகமில்லை. எனவே இந்தியா, இலங்கை மோதும் இந்த போட்டித் தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

- Advertisement -