இலங்கை டி20.. நாளை மறுநாள் உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கம்பீரின் முதல் படை.. யாருக்கு வாய்ப்பு?

0
7157
ICT

இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி நாளை அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதல்முறையாக கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். நாளை மறுநாள் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

நாளை மறுநாள் போட்டிக்கான அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால், துவக்க ஆட்டக்காரர்களாக துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்குவது உறுதி. மேற்கொண்டு மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் களம் இறங்குவார். எனவே சஞ்சு சாம்சன் விளையாடுவது கடினம். நான்காவது இடத்தில் வழக்கம் போல் சூரியகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் சிவம் துபே ஆகியோர் விளையாடுவார்கள். சிவம் துபே விளையாடுவதால் ரியான் பராக் மற்றும் ரிங்கு சிங் இருவருமே விளையாடுவது கடினம்.

மேலும் ஆறாவது, ஏழாவது எட்டாவது இடங்களில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூன்று ஆல்ரவுண்டர்கள் இடம் பெறுவார்கள். ஒன்பதாவது இடத்தில் பிரதான சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய், பத்தாவது மற்றும் பதினொன்றாவது இடத்தில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

நாளை மறுநாள் போட்டியில் டி20 உலகக் கோப்பை பிளேயிங் லெவனில் இருந்து விராட் கோலி ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இடங்களில் நான்கு வீரர்கள் புதிதாக இடம் பெறுகிறார்கள். மீதி 7 வீரர்கள் விளையாடியவர்களே விளையாடவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க : 189 ரன்.. பட்டைய கிளப்பிய பவுலிங்.. நடராஜன் இந்திய செலக்டர்களுக்கு மெசேஜ்.. திருப்பூர் நெல்லை அணியை வென்றது

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.

- Advertisement -