11 ஓவர்.. பாக் அணிக்கு எதிராக ஆஸி இமாலய வெற்றி.. இந்தியா செமி பைனல் போக இனி என்ன நடக்க வேண்டும்.?

0
5621

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் இணைந்திருக்கும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

- Advertisement -

எளிதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் குரூப் ஏ பிரிவில் 14வது லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 11 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலமாக குரூப் ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று +2.786 என்ற ரன் ரேட் அடிப்படையில் வலுவான நிலையில் இருக்கிறது. அதற்கு அடுத்து இந்திய அணி +0.576 என்ற ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் இருக்கின்றன. இதில் ஸ்ரீலங்கா அணி ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

- Advertisement -

இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு

தற்போது இந்திய அணிக்கு கடைசி போட்டியாக ஆஸ்திரேலியா அணியோடு கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணிக்கு அடுத்ததாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளோடு நடைபெற உள்ள போட்டியில் தோல்வியடைய வேண்டும்.

இதையும் படிங்க:இலங்கை வெஸ்ட் இண்டீஸ் டி20.. இந்தியாவில் எப்படி பார்க்கலாம்?.. போட்டி தொடங்கும் நேரம்.. முழு விபரம்

ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் ஒன்றில் நிச்சயம் தோற்க வேண்டும். அப்படி இருக்கும் போது இந்திய அணி ரன்ரேட் அடிப்படையில் நல்ல நிலையில் இருப்பதால் இரண்டாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெறும். எனவே அடுத்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது கிட்டத்தட்ட தெளிவாகிறது.

- Advertisement -