வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தற்போது தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் போட்டி நடைபெறும் நேரம், மைதானம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.
வெஸ்ட் இண்டீஸ் இலங்கை கிரிக்கெட் தொடர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ரோமன் போவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டு துறைகளிலும் வலுவாக விளங்குகிறது. சாய் ஹோப், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப் போன்ற அனுபவ வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
அசலங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியும் தற்போது ஜெயசூர்யாவின் பயிற்ச்சியின் கீழ் சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை அணியிலும் குசால் மெண்டிஸ் குசால் பெரேரா மற்றும் கமிந்து மெண்டிஸ் போன்ற அனுபவ வீரர்கள் இருக்கின்றனர். இதில் முதல் மூன்று டி20 போட்டிகள் 13, 15, 17ம் தேதிகளில் தம்புல்லா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
போட்டியில் நடைபெறும் நேரம், தேதி அறிவிப்பு
இதற்குப் பிறகு நடைபெற உள்ள மூன்று ஒரு நாள் போட்டிகளில் முதல் போட்டி பல்லிகேலேவில் வருகிற 20 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 23ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 26ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் டி20 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கும் ஒரு நாள் போட்டிகள் அனைத்தும் மதியம் 02.30 மணி அளவில் தொடங்க இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் டி20 போட்டிகளில் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதில் எட்டு முறை இலங்கை அணியும், ஏழு முறை வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன.
இதையும் படிங்க:எனக்கு புரியல.. ஒரு அம்பயருக்கு பாக் கிரிக்கெட்டில் என்ன வேலை.. இது எல்லாம் தேவையே கிடையாது – தன்வீர் விமர்சனம்
இந்த போட்டித் தொடர் இந்தியாவின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை அதற்கு மாறாக இணையதளத்தில் பேன் கோடு ஆப் மூலமாக போட்டிகளை நேரடியாக காணலாம். இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு அணிகளிலும் அதிரடிக்கு பஞ்சம் இல்லாத வீரர்கள் இருப்பதால் இந்த போட்டித் தொடர் ரசிகர்களிடையே சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.






