இந்திய கிரிக்கெட்

அடுத்த 41 நாள்.. 0 போட்டி.. இனி 2024ல் இந்திய அணியின் அட்டவணை.. டிசம்பரில் அசத்தல் தொடர்

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டி20 தொடரை வெற்றியுடனும், ஒரு நாள் தொடரை தோல்வியுடனும் முடித்திருக்கிறது. இதற்கு அடுத்து கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் செப்டம்பர் மாதத்தில் இந்தியா வங்கதேச அணியுடன் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் 2024 மற்றும் 2025 ஆண்டுக்கான இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்த வருட இறுதியில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இருக்கும்.

டி20 உலகக் கோப்பைத் தொடரை முடித்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. அதற்குப் பிறகு இலங்கையில் மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதற்குப் பிறகு வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் செப்டம்பர் 19 மற்றும் செப்டம்பர் 27ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் நடக்கிறது. மூன்று டி20 போட்டிகள் முறையே அக்டோபர் 6, 8, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

அதற்குப் பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பையிலும் நடைபெற உள்ளது.

- Advertisement -

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் இடைவெளியில், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நான்கு டி20 போட்டிகள் முறையே நவம்பர் 8, 10, 13, 16ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்குப் பிறகு நவம்பர் மாதத்தில் நடைபெறும் முக்கிய தொடரான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி நடைபெற இருக்கிறது.

நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டியும், டிசம்பர் ஆறாம் தேதி அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், மூன்றாவது போட்டியில் டிசம்பர் 14ஆம் தேதி பிரஸ்பேனிலும், நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னிலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க:இப்போ ஆச்சும் ஒத்துக்குறீங்களா.? அவர் இல்லன்னா இந்திய அணி கண்டிப்பா ஜீரோதான்.. பாக் முன்னாள் வீரர் காட்டமான பதிவு

அதற்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 12-ம் தேதியோடு முடிவடைகிறது.

- Advertisement -
Published by