இப்போ ஆச்சும் ஒத்துக்குறீங்களா.? அவர் இல்லன்னா இந்திய அணி கண்டிப்பா ஜீரோதான்.. பாக் முன்னாள் வீரர் காட்டமான பதிவு

0
18461

இந்தியா மற்றும் இலங்கை அணி அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நடப்பு இந்திய அணி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் காட்டமான விமர்சனம் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புத்துணர்ச்சியோடு ஒருநாள் தொடருக்கு களமிறங்கியது. மேலும் டி20 உலக கோப்பையை வென்ற கையோடு களம் இறங்கிய இந்திய சீனியர் வீரர்களால் ஒரு நாள் தொடரை எளிதாக இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததற்கு நேர் மாறாக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது.

எனவே அடுத்த போட்டியில் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அணி நிர்ணயத்த 240 ரன்கள் இலக்கை துரத்த முடியாமல் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை நிர்ணித்த 248 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது.

- Advertisement -

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய இலங்கையை ஏழாவது விக்கெட்டுக்கு 68 பந்துகளில் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் தடுமாறியது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 89 ரன்களுக்கு முதல் விக்கெட்டும் 171 ரன்களுக்கு 2வது விக்கெட்டையும் எடுத்தது. பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதற்கு இந்த தொடர் நல்ல உதாரணமாக அமைந்தது.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜூனைத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சு பூஜ்ஜியம்தான்” என்று காட்டமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:வீரர்களை அங்க இருந்துதான் கொண்டு வரணும்.. ஆனா மேட்ச்ல இதை செய்யாம தப்பு பண்ணிட்டோம் – ரோகித் சர்மா கருத்து

இந்த ஒரு நாள் தொடரின் தோல்வி இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு அதற்கு முன்னதாக இன்னும் மூன்று ஒரு நாள் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. எனவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தடுமாறி வரும் இந்திய அணி இந்த பிரச்சனைகளை விரைவில் சரி செய்ய வேண்டியது அவசியம்.

- Advertisement -