இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் இணைந்திருக்கும் புதிய சுழற்பந்து வீச்சாளர்- யார் இந்த சவுரப் குமார்

0
1442
Saurabh Kumar Spinner

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஆக நடைபெறும் இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி முன்னிலை வைக்கிறது. மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். டி20 தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த தொடருக்கான அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த டி20 தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்த இரண்டு தொடர் நடக்கும் தற்போதைய பிசிசிஐ அதில் விளையாட போகும் வீரர்களின் விவரத்தை வெளியிட்டு விட்டது. பல நாட்களாக இந்திய ரசிகர்களின் மனதில் இருந்த அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்விக்கும் இன்று விடை கிடைத்துள்ளது. பலரும் எதிர்பார்த்தபடி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கூடவே பல நாட்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் இரண்டு சீனியர் வீரர்களான ரகானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கமான வீரர்களுடன் இந்த முறை புதிதாக இடது கை சுழற்பந்து வீச்சாளரான சவுரப் குமார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 2015ஆம் ஆண்டு முதல் உத்தரபிரதேச அணிக்கு விளையாடி வரும் இவர் இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கும் ஆல்ரவுண்டர் ஆவார்.

இதுவரை 46 முதல் தர போட்டிகளில் 1572 ரன்கள் மற்றும் 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவற்றில் இரண்டு சதம் மற்றும் எட்டு அரை சதங்களும் அடங்கும். முக்கிய போட்டிகளில் 25 ஆட்டங்களில் 37 விக்கெட்டுகளையும் 173 ரன்களும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 33 ஆட்டங்களில் விளையாடி 148 ஆண்களும் 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த தென்ஆப்பிரிக்க தொடரிலேயே மாற்று வீரராக இருந்த இவர் தற்போது 18 பேர் கொண்ட ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு மற்றுமொரு அருமையான சுழற்பந்து வீச்சாளரை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.