உலக கிரிக்கெட்

ஹாங்காங் 6 பேர் கிரிக்கெட்.. 12 வருடத்திற்கு பின் இந்தியா பங்கேற்பு.. பாக் உட்பட 12 அணிகள்.. தொடங்கும் தேதி அறிவிப்பு

டெஸ்ட் மற்றும் ஒருநாள் என நீண்ட வடிவ கிரிக்கெட் தொடர்களை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு போட்டி சுவாரசியத்தை கூட்டும் விதமாக டி20 மற்றும் டி10 தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இவை அறிமுகமாவதற்கு முன்பாகவே ஹாங்காங் சிக்ஸஸ் என்னும் குறுகிய வடிவ கிரிக்கெட் தொடர் பல வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடைபெற உள்ளது.

- Advertisement -

இதில் இந்திய கிரிக்கெட் அணி 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் இந்த தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

12 வருடத்திற்கு பிறகு

ஹாங்காங் சிக்ஸஸ் என்னும் ஐந்து ஓவர்கள் கொண்ட குறுகிய வடிவ கிரிக்கெட் தொடர் முதன்முதலாக 1993ஆம் ஆண்டு முதல் 97ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டது. பின்னர் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 2001ஆம் ஆண்டு திரும்பவும் வந்து 2012ஆம் ஆண்டு வரை திரும்பவும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டது. இதில் கடைசியாக 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட போது அதில் இந்திய அணி பங்கு பெறவில்லை. தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது.

இந்த தொடரில் மொத்தமாக 12 சர்வதேச நாடுகள் கலந்து கொள்ளும் நிலையில் அதில் இந்திய அணியும் ஒன்றாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்த தொடரில் பாகிஸ்தான் அணியும் கலந்து கொள்ள இருப்பது இருநாட்டு ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

- Advertisement -

ஒரு அணிக்கு ஆறு பேர் மட்டும்

இதில் நடத்தப்படும் போட்டிகள் அனைத்துமே அதிகபட்சமாக ஒரு போட்டி சுமார் 45 நிமிடங்கள் வரை மட்டுமே நடத்தப்படும். இதில் ஒரு அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள். பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் தவிர நான்கு பீல்டிங் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பரை தவிர அனைவரும் தலா ஒரு ஓவர்கள் வீசுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது மொத்தமாக ஒரு அணி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசும்.

பேட்டிங்கை பொருத்தவரை இந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேன் 31 ரன்கள் குவித்தால் அவர் உடனடியாக ரிட்டையர்டு ஹட் ஆகி அடுத்த பேட்ஸ்மேன் களமிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அவர் வெளியேறிய பிறகு மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டம் இழந்தால் திரும்பவும் அவரே மீண்டும் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும்.

இதையும் படிங்க:என்ன ஒரு மனசு.. கம்பீர் என்கிட்ட அத சொன்னதும்.. 25 வருட முன் சச்சின் எனக்கு செஞ்சது ஞாபகம் வருது – முரளி கார்த்திக் பேட்டி

இந்த தொடரில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் லாரா ஆகியோரும் விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை டி20 மற்றும் டி10 என பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இந்த குறுகிய ஓவர் போட்டி தொடர் மிக விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் ரசிகர்களுக்கு அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

- Advertisement -
Published by

Recent Posts