“இந்திய அணி தனக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுகிறது!” – சல்மான் பட் குற்றச்சாட்டுகள் மீது விளாசல்!

0
3951
Butt

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய ஏழு போட்டிகளிலும் வென்று அசத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

மேலும் இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளை 9 மைதானங்களில் விளையாடுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக கிலோமீட்டர் பயணம் செய்யும் அணியாக இந்திய அணியே இருக்கிறது.

- Advertisement -

சொந்த நாட்டில் உலகக் கோப்பை நடப்பதால் இந்திய அணி ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் விளையாடுவது போன்ற சாதகங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக மற்றவர்களுக்கு அந்தச் சாதகத்தைக் கொடுத்துவிட்டு, இந்தியா ஒவ்வொரு போட்டிக்கும் பறந்து சென்று விளையாடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு பயிற்சி போட்டியும் முதல் இரண்டு போட்டியும், ஹைதராபாத்தில் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் ஒரே மைதானத்தில் ஒரே இடத்தில் தங்கி இருந்து விளையாடினார்கள். மேலும் இரண்டு மைதானங்களில் தலா இரண்டு போட்டிகள் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மைதான சூழ்நிலைபழக்கமாகும் சாதகம் இருந்தது. இது இந்திய அணிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி தனக்கு சாதகமான மைதான சூழ்நிலைகளில், ஆடுகளத்தில் விளையாடுகிறது என்று வெளியில் இருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. ஹசன் ராஸா என்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர், இந்தியாவிற்கு என சிறப்பு பந்துகள் கொடுக்கப்படுகிறது என்று எல்லாம் குற்றச்சாட்டு வைக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் கூறும் பொழுது “இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருப்பவர்களை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடாமல் வெவ்வேறு மைதானங்களுக்கு சென்று விளையாடுகிறது. அவர்களுக்கு ஒரே மைதானத்தில் இரண்டு போட்டிகள் இல்லை.

அவர்கள் சிவப்பு மற்றும் கருப்பு மண் என இரண்டு ஆடுகளத்திலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எல்லாவிதமான கண்டிஷனிலும் சிறப்பாக இருந்தார்கள். அடிப்படையற்ற விஷயங்களை இந்தியா மீது பேசுவது தவறு. அவர்கள் நன்றாக விளையாடுகின்ற காரணத்தினால் மட்டுமே வெல்கிறார்கள்!” என்று இந்தியா மீது குற்றச்சாட்டு வைப்பவர்களை விளாசி இருக்கிறார்!