எனக்கு ஆரஞ்சு கேப் முக்கியமில்லை, சிஎஸ்கே டீம் வெற்றிக்கு தரமான ஓபனிங் கொடுக்கணும்.. இது போதும் – ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டி!

0
690

என்னுடைய கவனம் எல்லாம் ஆரஞ்சு கேப் மீதல்ல, சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று பேசியுள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மிகச் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே அணி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் தோல்வியும், இரண்டாவது போட்டியில் வெற்றியும் பெற்று இருக்கிறது.

- Advertisement -

இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு மிகச்சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். அப்போட்டியில் 50 பந்துகளுக்கு 92 ரன்கள் விளாசினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

ருத்துராஜ், 2019ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடங்களாக சிஎஸ்கே அணியில் இருந்து வந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக களமிறங்கி விளையாடினார்.

- Advertisement -

இதில் அரைசதம் அடித்து அசத்தி, தற்போது ஆரஞ்சு தொப்பியையும் பெற்றுள்ளார். போட்டி முடிந்த பிறகு இது குறித்து ருத்துராஜ் பேசுகையில்,

“எனது கவனம் எல்லாம் ஆரஞ்சு தொப்பியின் மீது இல்லை. சென்னை அணிக்கு மிக சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அணியில் 10 வீரர்கள் வரை பேட்டிங் செய்தாலும் நல்ல துவக்கம் கிடைத்தால் மட்டுமே அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அதை பெரிய அளவில் எடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்.

மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக விளையாடுவது இனம் புரியாத உணர்வை கொடுத்திருக்கிறது. ரசிகர்களின் அன்பை இதுவரை வெளியில் இருந்து ஒரு வீரராகவே பார்த்திருக்கிறேன். முதல் முறையாக களத்தில் இருந்த போது அதை அனுபவித்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது.” என்று பேசினார்.