நேத்து ஓய்வு.. இன்னைக்கு யு-டர்ன்! – பங்களாதேஷ் வீரர் அந்தர் பல்டி!

0
1323

நேற்று ஓய்வு முடிவே அறிவித்த வங்கதேச வீரர் தமீம் இக்பால், இன்று ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

வங்கதேசம் அணியின் கேப்டனாக இருந்த தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி முடிவுற்றவுடன் அறிவித்தார். இவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் பேசினார்.

தமீம் இக்பால் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தது வங்கதேசம் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருக்கு கூட தெரியவில்லை. அந்த அளவிற்கு உடனடியாக முடிவு செய்து தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். பின்னர் இந்த செய்தி தெரிய வந்தவுடன் உடனடியாக தமீம் இக்பாலுக்கு அழைத்துப் பேச முயற்சித்த போது முடியவில்லை என்று வாரியத்தின் தலைவர் கூறினார்.

அதன் பிறகு இந்த விவகாரத்தில் வங்கதேசம் பிரதமர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆகியோர் தலையிட்டு தமீம் இக்பால் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமூகமாக முடிந்ததால் இன்று தன்னுடைய ஓய்வு முடியை திரும்ப பெற்றிருக்கிறார் தமீம் இக்பால்.

- Advertisement -

இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் நடைபெறுவதால் கண்டிஷன் நன்கு பழக்கப்பட்டதாகவே இருக்கிறது. தமீம் இக்பால் வங்கதேச ஒருநாள் அணியை வழி நடத்தி வருகிறார். அவர் இப்படி உடனடியாக ஓய்வு முடிவை அறிவித்திருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை தரலாம். ஏனெனில் புதிய கேப்டன் பொறுப்பேற்று அணியை இவ்வளவு விரைவாக உலக கோப்பைக்கு வழிநடத்திச் செல்வது என்பது எளிதல்ல ஆகிய காரணங்களுக்காக ஓய்வை திரும்பப்பெற வைத்திருக்கலாம்.

தமீம் இக்பால் 2007ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 17 வருடங்களாக வங்கதேசம் அணியில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 241 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள் உட்பட 8,313 ரன்கள் குவித்து லெஜெண்டாக இருக்கிறார்.

திரும்ப வந்துள்ள தமீம் இக்பால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மீதமுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருப்பார் என்றும் தகவல்கள் கூறப்பட்டது.