“ரோகித் சர்மாவை பார்த்து தமிம் இக்பால் திருந்தனும்” – ஷகிப் நேரடி தாக்கு.. முற்றிய சண்டை!

0
8631
Bangladesh

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது இறுதி அணியை வெளியிட்டு விட்டன.

நேற்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்களது உலகக்கோப்பை 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டது. இந்த அணிக்கு சகிப் அல் ஹசன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

அதே சமயத்தில் பங்களாதேஷ் அணிக்கு 16 ஆண்டுகளாக விளையாடி வந்த மூத்த அனுபவ வீரர் தமிம் இக்பால் அதிரடியாக பங்களாதேஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இது பங்களாதேஷ் கிரிக்கெட் வட்டாரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்திருந்தது. பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் விஷயங்கள் எதுவும் நல்லதாக இல்லை.

தமிம் இக்பால் நடக்க இருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு கேப்டனாக பங்களாதேஷ் அணியை வழிநடத்த இருந்தார். ஆனால் திடீரென ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் போது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

பின்பு அவரை பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நிர்வாகம் சமாதானப்படுத்தி அழைத்து வந்தது. இந்த நிலையில் அவர் அணி உடன் சுமுகமாக இல்லை என்று தகவல் தெரிந்தது. ஷகிப் அல் ஹசன் இதனால் திருப்தி இல்லை என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து தமிம் இக்பால் கூறும்பொழுது “நான் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறேன். என்னை உலககோப்பையில் நடுவரசையில் விளையாட வைக்க இருப்பதாக செய்திகள் கிடைத்தது. எனக்கு அந்த இடத்தில் எப்படி விளையாடுவது என்றே தெரியாது. எனவே நான் விளையாடாமல் இருப்பதே நல்லது!” என்று கூறியிருக்கிறார்!

இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள பங்களாதேஷ் அணியின் கேப்டன் சகிப் அல் ஹசன் கூறும் பொழுது ” இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் கேரியரை ஏழாம் இடத்திலிருந்து படிப்படியாக துவக்க வீரராக கட்டமைத்தார். அவர் தற்பொழுது பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். சில சமயங்களில் மூன்று மற்றும் நான்காம் இடங்களில் பேட்டிங் செய்வது பிரச்சினையாக மாறுமா?

இது முற்றிலும் குழந்தைத்தனமானது. இது என்னுடைய பேட் இதை யாருக்கும் தரமாட்டேன். நான் தான் விளையாடுவேன். என்பதை போன்றது. நீங்கள் அணியை பற்றி சிந்திக்கவே இல்லை. மக்களுக்கு இங்கு நடக்கும் எதுவும் தெரியாது!” என்று கூறியிருக்கிறார்!