இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்த தமிழர் ; டி20 உலகக் கோப்பையில் சாதனை!

0
405
T20iwc2022

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டி ஒன்றில் இலங்கை அணியும் யுஏஇ அணியும் மோதி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் நல்ல துவக்கம் தந்தார்கள். குசல் மெண்டிஸ் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து நிசாங்கா உடன் கூட்டணி அமைத்த தனஞ்சய டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். 21 பந்தில் 33 ரன்கள் எடுத்த தனஞ்சய தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

இதற்கு நடுவில் மிகச் சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் நிசாங்கா அரைசதம் அடித்து களத்தில் நின்றார். இவருடன் விளையாட ராஜபக்சே வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில்தான் இலங்கை அணியின் பேட்டிங் வரிசையை திடீரென சூறாவளி போல் பந்துவீச்சில் சீர்குலைத்து விட்டார் யுஏஇ அணிக்காக விளையாடி வரும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லெக் ஸ்பின்னர் கார்த்திக் மெய்யப்பன்.

ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன் அந்த ஓவரின் 4, 5 மற்றும் 6-வது பந்தில் தொடர்ந்து ராஜபக்சே, அசலங்கா மற்றும் கேப்டன் சனகா மூவரின் விக்கெட்டையும் எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய அவர் மொத்தம் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியை பெரிய நெருக்கடிக்குள் தற்போது தள்ளியிருக்கிறார்.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் பொழுது நெதர்லாந்து அணியின் ரன் ரேட்டை விட கூடுதலாக பெறும். இல்லையென்றால் அடுத்து நெதர்லாந்து அணி உடன் விளையாடும் போட்டியில் இலங்கை அணிக்கு பெரிய அழுத்தம் உண்டாகும். இந்த நிலையில் கார்த்திக் மெய்யப்பன் இலங்கைக்கு ஹாட்ரிக் விக்கெட் மூலம் பெரிய நெருக்கடியை உண்டாக்கி விட்டார்!