இந்திய கிரிக்கெட்

89 ஓவர்.. தமிழ்நாடு அணியை காப்பாற்றிய 18 வயது சிஎஸ்கே வீரர்.. அன்றே கணித்த அஸ்வின்.. ரஞ்சி டிராபி 2025

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வரும் நிலையில் எலைட் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் மோதி விளையாடுகின்றன.

- Advertisement -

இதில் தமிழக அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கிய ஆன்ட்ரே சித்தார்த் அபாரமாக விளையாடி சதம் அடித்து தமிழக அணியை காப்பாற்றினார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அணியை காப்பாற்றிய இளம் வீரர்

சேலத்தில் ரஞ்சி டிராபி தொடரின் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க, தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் களம் இறங்கியது. இதில் முகமது அலி 40 ரன், நாராயணன் ஜெகதீசன் 63 ரன் மற்றும் பாபா இந்திரஜித் 49 ரன் குவிக்க மற்றவர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இதன்படி சிக்கலில் இருந்த தமிழ்நாடு அணியை ஆறாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய 18 வயது இளம் வீரர் ஆன்ட்ரே சித்தார்த் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்து காப்பாற்றினார்.

143 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 106 ரன்கள் குவித்து அபார சதம் அடித்து அசத்தினார். இதனால் தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 301 ரன்கள் குவித்தது. இதில் சித்தார்த் அபாரமாக விளையாடி அழுத்தத்தை சிறப்பாக கையாண்டதோடு மட்டுமல்லாமல் தனது ஒழுக்கமான பேட்டிங் டெக்னிக்குகளால் அனைவராலும் கவரப்பட்ட வீரராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு சித்தார்த் ஒப்பந்தம்

இவர் எதிர்காலத்தில் இந்திய நட்சத்திர வீரராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சித்தார்த் ஏற்கனவே ஐந்து முதல் தர போட்டிகளில் விளையாடி 372 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் சிறப்பாக பேட்டிங் செய்து தனது திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது பேட்டிங் திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தது.

இதையும் படிங்க:இந்த பையன் ரொம்ப புத்திசாலி.. அடுத்த இந்திய கேப்டனா வர எல்லா தகுதியும் இருக்கு – ஆஸி பிராட் ஹாக் கணிப்பு

எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக களமிறங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதேபோல இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இவரது திறமையை ஏற்கனவே அறிந்து ‘எதிர்கால நட்சத்திரம்’ என புகழ்ந்து பேசி இருக்கிறார். இவர் சொன்னது பலிக்கும் விதமாக தற்போது ரஞ்சி
தொடரில் சிறப்பாக விளையாடி சவம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts