இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் இந்திய அணியின் வருங்கால கேப்டன் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபாரமாக விளையாடிய அபிஷேக் 79 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த தென்னாப்பிரிக்க அடுக்கு எதிரான தொடரில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய 22 வயதான திலக் வர்மா இந்த முறை வலது இடது காம்பினேஷனுக்காக சூரியகுமார் யாதவ் இந்த முறை சாம்சன் அவுட் ஆன பிறகு அவரே மூன்றாவதாக களம் இறங்கினார். இருப்பினும் அவர் டக் அவுட் ஆக அவருக்குப் பின்னர் வந்த திலக் வர்மா 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சதம் அடித்த திலக் வர்மா புத்திசாலியான வீரர் எனவும் அடுத்த டி20 கேப்டனாக வருவதற்கு தகுதி இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.
இந்திய எதிர்கால கேப்டன் இவர்தான்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “திலக் வர்மா நான் நேசிக்கிற திறமையான ஒரு வீரர், அவர் விரைவாக இந்திய குறுகிய கிரிக்கெட்டில் அடுத்த கேப்டனாக வருவார் என்று நம்புகிறேன். அவர் மிகச் சிறந்த புத்திசாலி திறமையான கிரிக்கெட் மூளையை கொண்டவராக இருக்கிறார். மேலும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த சில முறைகளில் அவர் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.
இதையும் படிங்க:விமர்சனம் செஞ்சதுக்கு.. பிளேயேர்ஸ் இத செஞ்சு உங்களுக்கு சரியான பதிலடி தருவாங்க – தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் பேட்டி
அவருக்கு பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் ஆதரவு கிடைத்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங் செய்யும்போது இந்த ஆதரவு மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால் அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது” என்று கூறியிருக்கிறார். கடைசியாக அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






