ஐபிஎல் விளையாடாமல் இந்திய ஏ அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்; யார் இந்த பிரதோஷ் ரஞ்சன் பால்?!

0
1373
Pradosh

வருகின்ற ஜூலை 14 முதல் 23ஆம் தேதி வரை இலங்கையில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பைதொடர் நடக்க இருக்கிறது. இதில் மொத்தம் எட்டு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாடும் அணிகள் பங்கு பெறுகிறது. இதற்கு முன்பு வளர்ந்து வரும் வீராங்கனைகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு கடந்த அண்டர் 19 உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் யாஸ் துல் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பர் பிரதோஷ் ரஞ்சன் பால் இருவருக்கும் இடம் கிடைத்திருக்கிறது.

இதில் பிரதோஷ் ரஞ்சன் பால் ஐபிஎல் தொடர் விளையாடாமல் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று, ஆனால் கடந்த முறை நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனவர்.

தற்பொழுது இந்திய ஏ அணிகள் இடம் பெற்றுள்ள இரண்டு தமிழக வீரர்களும் டிஎன்பிஎல் டி20 தொடரில் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிரதோஷ் ரஞ்சன் பால் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணிக்காக விளையாடுகிறார்.

- Advertisement -

இவர் 2000ம் ஆண்டு ஒரிசாவில் பிறந்து தற்பொழுது தமிழகம் வந்து தமிழக அணியில் இடம் பிடித்து விளையாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அணிக்காக பத்து முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மூன்று சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடித்து, ரன் சராசரியை 60க்கும் மேல் சிறப்பான நிலையில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய ஏ அணியில் இடம் கிடைத்தது குறித்து பேசி உள்ள அவர் ” ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அளவிலான அணியில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அண்டர் 19 உலக கோப்பைக்கு நான் தேர்வாகாத பொழுது, அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான எனது பாதை மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் இந்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் வாய்ப்பு பெற்ற சாய் சுதர்சன் கூறும்பொழுது ” இது ஒரு கனவு நனவாகும் தருணம். மிகவும் உற்சாகமானது. ஆனால் அதே நேரத்தில் இது ஒரு தொடக்கம் மட்டும்தான். கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருந்தது. எனக்கான அங்கீகாரம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்!” என்று கூறியிருக்கிறார்.