“எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு சேப்பாக்கம் கிரவுண்ட் உள்ளவே விடல” – ஏக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்ட தமிழக வீரர் சாய் சுதர்ஷன்!

0
1286
Sai sudharsan

ஐபிஎல் 16வது சீசனில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி சுற்றுக்கான ப்ளே ஆப் குவாலிபயர் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது!

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு தமிழக இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு விளையாடும் வாய்ப்பையும் பெற்ற சாய் சுதர்சன் ஒரு அரை சதத்துடன் ஐந்து போட்டிகளில் 145 ரன்கள் எடுத்தார்.

இந்த ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆறு போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் உடன் 223 ரன்கள் எடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக மாறி இருக்கிறார்.

இன்று ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாட சென்னை சேப்பாக்கம் வந்திருக்கும் அவர் பழைய நினைவுகளில் மூழ்கி சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சாய் சுதர்ஷன் பேசும்பொழுது “சேப்பாக்கம் எப்பொழுதும் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் சிறுவயதில் அண்டர் 10 அண்டர் 12 முகாம்கள் இந்த மைதானத்தில்தான் எங்களுக்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த முகாம்களின் போது எங்களை மைதானத்திற்குள் விடவே இல்லை என்பது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. நான் அப்பொழுது சின்ன வழியின் வழியாக ஆஃபீஸ் ஏரியா பக்கம் வந்து மைதானத்தை அப்படியே எட்டிப் பார்த்தேன்.

சேப்பாக்கத்தில் நிறைய இனிமையான உணர்வுகள் இருக்கிறது. எனது முதல் டி20 ஆட்டம் இங்குதான் நடைபெற்றது. அந்த ஆட்டம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என்று சொல்வேன். சேப்பாக்கத்துக்குள் நுழைவது ஒரு சிறப்பு உணர்வு. மிகவும் ஏக்கமான ஒன்று.

எனது குடும்பம் மைதானத்தில் இருக்கும். என்னை ஆதரிப்பவர்களும் மைதானத்தில் இருப்பார்கள். இது சிறப்பு இது நிச்சயம் சிறப்பானதாகவும் உணர்ச்சிகரமானதாகவும் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்!