சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு தமிழக வீரர் முரளி விஜய் பதிலடி!

0
2004

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது . இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது .

இந்தப் போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது . ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை 273 ரன்கள் ஏழு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதம் அடித்தார் . அவர் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இது அவர் டெஸ்ட் போட்டிகளில் எடுக்கும் ஒன்பதாவது சதமாகும் . மேலும் இந்த சதத்தின் மூலம் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய கேப்டன் என்றால் சாதனையைப் படைத்திருக்கிறார் ரோஹித் .

இந்நிலையில் ரோகித் சர்மா தனது சதத்தை நெருங்கிய வேளையில் மைதானத்தில் இருந்த பெரிய டிவியில் இந்திய ஆடுகளங்களில் 50 ரன்கள் கடந்த பிறகு அவற்றை நூரு ரண்களாக மாற்றிய வீரர்களின் பட்டியலை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது . அப்போது அந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் முரளி விஜயின் பெயர் முதலில் வந்தது .

இது குறித்து வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்சரேக்கர்” இந்தப் பட்டியலில் முரளி விஜயின் பெயர் முதல் இடத்தில் இருப்பது ஆச்சரியமாக உள்ளது” என கூறினார். இது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் மற்றும் தமிழக அணிக்காக ஆடிய வருமான முரளி விஜய் தனது ட்விட்டரின் மூலம் சஞ்சய் மஞ்சரிக்கிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் .

- Advertisement -

இது பற்றி பதிவிட்டுள்ள முரளி விஜய் ” சில முன்னால் மும்பை வீரர்களால் தமிழக வீரர்களை புகழ்ந்து பேசவே முடியாது” என காட்டமாக பதில் அளித்து இருக்கிறார் . முரளி விஜய் இந்திய அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் சில தினங்களுக்கு முன்பு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்திருந்தார் . இந்தக் காலகட்டத்தில் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் முரளி விஜய் 12 சதங்களையும் 15 அரை சதங்களையும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .