ரஞ்சி காலிறுதி.. கோவையில் பேட்டிங்கிலும் சாய் கிஷோர் கலக்கல்.. புஜாரா அணிக்கு சிக்கல்

0
115
Kishore

இந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் டெஸ்ட் தொடர் ரஞ்சி சீசன் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. தற்பொழுது இந்தத் தொடர் கால் இறுதி சுற்றை எட்டி இருக்கிறது. தகுதி பெற்ற எட்டு அணிகளும் மோதி வருகின்றன.

இதில் கோவையில் தமிழக அணி புஜாரா இடம்பெற்று இருக்கும் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக நேற்று முதல் கால் இறுதியில் மோதி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 183 ரன்களுக்கு சுருண்டது. தமிழக அணியின் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் நான்கு விக்கெட் கைப்பற்றினால்.

நேற்று தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய தமிழ்நாடு அணி ஒரு விக்கெட் இழந்த காரணத்தினால் நைட் வாட்ச்மேன் ஆக கேப்டன் சாய் கிஷோர் களம் இறங்கினார். அவருடன் நாராயணன் ஜெகதீசன் களத்தில் நின்றார்.

இன்று தொடர்ந்து விளையாடிய தமிழக அணியில் நாராயணன் ஜெகதீசன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் மிகச் சிறப்பாக விளையாடிய பந்துவீச்சிலும் கலக்கிய கேப்டன் சாய் கிஷோர் அரை சதம் அடித்து, 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திரஜித் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மேலும் பூபதி குமார் 65 ரன்கள் எடுத்தார்.

இன்று இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து 117 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. விஜய் சங்கர் 14, முகமத் அலி 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழக அணி, சமீப காலத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான அணியாக இருக்கும் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. முதல் இன்னிங்ஸ் லீடிங் கிடைத்திருக்கின்ற காரணத்தினால், இந்தப் போட்டி டிரா ஆனால் கூட தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனாலும் நாளைய ஆட்டத்தில் தமிழக அணி இன்னும் நூறு ரன்கள் கூடுதலாக எடுத்தால் சிறப்பாக இருக்கும்.