சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக அதன் காரணமாகவே 2010 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை தொடரை கைப்பற்றிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் அந்த அணி ஒவ்வொரு ஆண்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அந்த அணி ஒரே ஒருமுறை மட்டும் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை, அது கடந்த ஆண்டு மட்டுமே. இப்படி ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பெயரை மறைத்து எந்தவித சாதனையும் குறிப்பிட முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக வீரர் முரளி விஜய் சுப்ரமணியம் பத்ரிநாத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை மிகசிறந்த அளவில் பயன்படுத்தியது. அவளும் அந்த அணிக்காக மிகப்பெரிய அளவில் தங்களுடைய திறமையை நிரூபித்தனர். இருந்தபோதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனால் ஐந்து சிறந்த தமிழக வீரர்களைப் பற்றி பார்ப்போம்
முருகன் அஸ்வின்
முருகன் அஸ்வின் லெக் ஸ்பின்னர் ஆவார். அவர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடினார். அதன் பின்னர் அங்கிருந்து பஞ்சாப் அணிக்கு சென்றல் கடந்த மூன்று வருடங்களாக பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு அவர் 9 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மிகச்சிறந்த ஸ்பின் வீரரான முருகன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கைப்பற்றாமல் போனது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. சென்னை மைதானம் ஸ்பின் பவலர்களுக்கு மிகச்சிறந்த மைதானம், எனவே அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் நிச்சயமாக அவரை சென்னை அணி வாங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தங்கராசு நடராஜன்
இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவர் முதலில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஆனால் அவருக்கு அங்கு அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் ஹைதராபாத் அணிக்காக களம் இறங்கி மிகப்பெரிய அளவில் தன்னுடைய திறமையை நிரூபித்தார். பின்னர் அங்கிருந்து இந்திய அணிக்கு அவர் வந்து விளையாட விதம் அனைவருக்கும் தெரியும்.
சென்னை அணி அதனுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் பெரிதாக நம்புவது தாகூர் மற்றும் தீபக் சஹர் ஆகிய இருவரை மட்டுமே. கூடுதல் பலத்திற்காக அவரை அந்த அணி எடுத்து இருந்திருக்கலாம் ஆனால் சென்னை அணி அவரை எடுக்கத் தவறியுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் அவரை எடுக்க நிச்சயம் போராடும், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தி தமிழக அணிக்காக உள்ளூர் ஆட்டங்களில் மிக அற்புதமாக வரி ஆடியவர் அதன் காரணமாக பஞ்சாப் அணி அவரை 2019ஆம் ஆண்டு தனது அணியில் எடுத்து விளையாட வைத்தது. கொஞ்சம் சுமாராக விளையாட அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் அங்கிருந்து சென்ற ஆண்டு கொல்கத்தா அணிக்கு விளையாடத் தொடங்கினார். கடந்த ஆண்டு இவர் மிக சிறப்பான வகையில் தன்னுடைய ஆட்டத்தை காண்பித்தார். எல்லோரும் இவரை பாராட்ட தொடங்கினார்கள். குறிப்பாக தோனியின் விக்கெட்டை இரண்டு முறை இவர் வீழ்த்தியுள்ளார். இவரது திறமையை கண்ட பிசிசிஐ இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஏலத்தில் நிச்சயமாக இவரை சென்னை அணி வாங்க முயற்சிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் தமிழக அணிக்காக பலமுறை பல அதிசயங்களை ஏற்படுத்தி உள்ளவர். 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்று வீரராக உள்ளே நுழைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சென்றார். அங்கே அவர் நன்றாக விளையாடி அனைவரையும் அசத்த, அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் இவர் அசத்தியது எல்லோரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
எனவே இவரை அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி நிச்சயமாக வாங்க முயற்சிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தினேஷ் கார்த்திக்
முதல் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட ஆசை பட்ட தினேஷ் கார்த்திக், விதியின் வசம் சென்னை அணியில் விளையாட முடியாமல் போனது. டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத், கொல்கத்தா என கடந்த 13 வருடங்களில் பல அணிகளுக்கு அவர் விளையாடியுள்ளார்.
தற்பொழுது கொல்கத்தா அணிக்காக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக கொல்கத்தா அணியில் இவருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சரியான வகையில் தலைமை தாங்க முடியாததால் இவர் தன்னுடைய தலைமை பொறுப்பை வேண்டாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் இதற்கு மேல் சென்னை அணியில் விளையாட போவது கிடையாது.