தலைமை பயிற்சியாளர் பதவி.. CSK அழைத்தாலும் போகாதீங்க.. தினேஷ் கார்த்திக்கிற்கு பத்ரிநாத் சொன்ன காரணம்

0
0

தினேஷ் கார்த்திக் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், அவர் அந்த முடிவை கவனமாக எடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, தற்போது RCB அணியில் அவருக்கு கிடைத்துள்ள சூழல் மிகவும் சிறப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பத்ரிநாத் கூறும் போது
“நான் தினேஷ் கார்த்திக் இடத்தில் இருந்தால் சிஎஸ்கேக்கு வருவது குறித்து இரண்டு முறை யோசிப்பேன். அவர் இதைப் பற்றி நீண்ட நேரம் யோசிப்பார் என நினைக்கிறேன். ஆனால், அவர் ஆர்சிபியிலேயே தொடர வேண்டும் என்பதுதான் என் கருத்து. தற்போது ஆர்சிபியில் அவர் மிகவும் நல்ல சூழலில் இருக்கிறார்” என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -


மேலும் ஆர்சிபி அணியில் தற்போது அனைத்தும் சரியான நிலையில் அமைந்துள்ளதாகவும், வீரர்கள் அனைவரும் தங்களது சிறந்த கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஐபிஎல்லின் முதல் 8 முதல் 10 ஆண்டுகளில் சிஎஸ்கே எந்தளவுக்கு சிறந்த நிலையில் இருந்ததோ, தற்போது RCB அதேபோன்ற ஒரு கட்டத்தில் உள்ளது,” என்றும் பத்ரிநாத் கூறியுள்ளார்.

- Advertisement -