இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பாபா அபராஜித், தற்போது தமிழ்நாட்டில் இருந்து விலகி கேரளாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அபராஜித்தின் இந்த முடிவுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி சீசன் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கேரள கிரிக்கெட் சங்கம் பாபா அபராஜித்தை அணுகியதை தொடர்ந்து, அவர் இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இனி வரும் தொடர்களில் கேரளா அணிக்காக உள்நாட்டு தொடர்களில் விளையாட உள்ளார்.
30 வயதான தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் வீரர் பாபா அபராஜித் கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தார். ஆல் ரவுண்டர் ஆன இவர் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர், முதல் தர கிரிக்கெட்டில் 90 போட்டிகளில் விளையாடி 4571 ரன்கள் குவித்து இருக்கிறார்.
107 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 43 பேட்டிங் சராசரியுடன் உடன் 3869 ரன்கள் குவித்து இருக்கிறார். 2013ம் ஆண்டு முதல் தர டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1147 ரன்களும் குவித்திருக்கிறார். பந்து வீச்சை பொறுத்தவரை 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளும், 107 லிஸ்ட் ஏ போட்டிகளில் 71 விக்கட்டுகளும், 63 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.
தனது 17வது வயது முதலே ரஞ்சி சீசனில் தமிழ்நாடு அணிக்காக விளையாட ஆரம்பித்த அபராஜித் தற்போது 30 வயது வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் கடந்த ரஞ்சி சீசனில், தமிழ்நாட்டு அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் கேரளா அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஸ்ரேயாஸ் கோபால் விலகி கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் இணைந்துள்ளார்.
எனவே ஒரு ஆல் ரவுண்டரை நிறைவு செய்யும் விதமாக கேரள கிரிக்கெட் சங்கம் அபராஜித்தை தொழில் முறை ரீதியாக அணுகி இருக்கிறது. இதனால் கேரளாவில் இணைய முடிவெடுத்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை பிரிவில் இந்திய அணிக்காக விளையாடினார்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் பவுலர் கிடையாது.. புதிய பந்தில் என்னை விட சிறந்தவர் இந்த இந்தியர்தான் – வாசிம் அக்ரம் தேர்வு
அந்த அண்டர் 19 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கால் இறுதி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 171 ரன்கள் மற்றும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.