உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து பேச்சாளர்களில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தனி இடத்தை பெறக்கூடிய பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்த நிலையில் அவரே தன்னைவிட குறிப்பிட்ட ஒரு பந்துவீச்சாளர் தான் பல விஷயங்களில் சிறந்தவராக இருக்கிறார் என்று வெளிப்படையாக பாராட்டி இருக்கிறார்.
வாசிம் அக்ரம் பந்தை ஸ்விங் செய்வதில் மிகப்பெரிய வல்லவர். வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை பந்துவீச்சாளரான அவர் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வீசக்கூடிய ஸ்விங் பந்துகள் மிகப்பெரிய மேஜிக் என்று கூறும் அளவுக்கு இருக்கும். மேலும் புதிய பந்தில் அவரைப்போல பந்தை கண்ட்ரோல் உடன் ஸ்விங் செய்பவர்களை பார்ப்பது அரிது.
சர்வதேச கிரிக்கெட்டில் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 356 போட்டிகளில் 502 விக்கெட்டுகள் கைப்பற்றி தனி ஒரு வீரராக மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறார். மேலும் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 2000 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
இப்படிப்பட்ட தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் தன்னைவிட சிறந்த பந்துவீச்சாளர் என ஒரு இந்திய பந்துவீச்சாளரை குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஈசல் போல குவிந்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அவர் தன் நாட்டு வீரரை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” பும்ராதான் தற்போது பந்துவீச்சாளர்களில் தலைசிறந்தவர். அவர் ஏணியின் உச்சியில் இருக்கிறார். கட்டுப்பாடு, வேகம், வேரியேஷன் என அவர் ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளர். புதிய பந்தில் ஆடுகளத்தில் சிறந்த மூவ்மெண்டை பெறக் கூடியவர். அதில் அவருடைய வேகம் மற்றும் ஃபாலோ த்ரு என அவர் முற்றிலும் முழுமையான வேகப் பந்துவீச்சாளர். நீங்கள் அப்படியான பெயரை வழங்க வேண்டும்.
இடது கை பேட்ஸ்மேனுக்கு அவர் ரவுண்டு த ஸ்டெம்பில் இருந்து வந்து பந்தை அடிக்கும் பொழுது நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. மேலும் அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேனுக்கு ஓவர் த விக்கெட்டில் கிரீசில் வைடாக இருந்து வீசும் பொழுது, பேட்ஸ்மேன் வந்து உள்ளே வருகிறது என்று நினைக்கிறார். ஆனால் பந்து அங்கிருந்து வெளியே செல்கிறது.
இதையும் படிங்க : துலீப் டிராபி 4 அணி அறிவிப்பு.. கில் ருதுராஜ் கேப்டன்.. ஜெய்ஸ்வால் முதல் சாய் சுதர்சன் ஒட்டுமொத்த இந்திய வீரர்கள்
நான் இதே போலான அவுட் ஸ்விங்கர் பந்தை வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வீசும்போது, புதிய பந்தில் எனக்கு கண்ட்ரோல் இல்லாமல் சில நேரங்களில் போய்விடும். ஆனால் பும்ராவுக்கு புதிய பந்தில் எப்பொழுதும் மிகச்சிறந்த கண்ட்ரோல் இருக்கிறது” என்று வெளிப்படையாகப் பாராட்டி இருக்கிறார்.