என்னோட அந்த கிரிக்கெட் முடிஞ்சிடுச்சு.. என் எதிர்காலம் 2 வருஷம் கழிச்சு தெரியும் – நடராஜன் பேட்டி

0
153
Natarajan

தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு சென்ற கிரிக்கெட் வீரர்களில் தற்காலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பிறகு டி.நடராஜன் மிகவும் கவனம் ஈர்க்கக் கூடியவராக இருந்தார். இந்த நிலையில் ஆரம்ப வாய்ப்புக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி.நடராஜன் அறிமுகமானார். மோசம் இல்லாத அளவுக்கு அவர் மூன்று வடிவத்திலுமே பந்து வீசி இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு இந்திய அணியில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை 2024

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டி.நடராஜன் சிறப்பான முறையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி இருந்த பொழுதும் கூட டி20 உலகக்கோப்பை இந்திய அணி அல்லது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்படவில்லை. இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

நடராஜன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் மிக மோசமான பின்னடைவுகளை உருவாக்கி இருந்தது. ஆனால் அவர் காயத்தில் இருந்து திரும்பி வந்து சிறப்பாக செயல்பட்ட பிறகும் இந்திய அணியில் அவருக்கான கதவுகள் திறக்கவில்லை. மேலும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என வெளியில் பேசுவதே தான் செய்த சாதனை என்று நடராஜன் கூறியிருந்தார். அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவத்தில் அவர் விளையாடி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

- Advertisement -

என்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் இதுதான்

இந்த நிலையில் டி.நடராஜன் இதுகுறித்து பேசும் பொழுது “நான் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்று அர்த்தம் கிடையாது. இந்த வடிவத்தில் விளையாடும் பொழுது அது எனது பணிச்சுமையை அதிகரிக்கிறது. எனக்கு முழங்காலில் பிரச்சனை இருப்பதால் பணிச்சுமையை நிர்வகிக்க முடியவில்லை. எனவே நான் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதை நிறுத்தி விட்டேன்.

இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட்ல இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க.. அந்த கண்டிஷன்ல பிரமாதமா ஆடுவாரு – இந்திய முன்னாள் வீரர் பேட்டி

எனக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதுதான் பிடிக்கும். நான் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடும் போதெல்லாம் மிகவும் ரசித்து விளையாடினேன். எல்லாம் திட்டமிட்டபடி சென்றால் நான் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு திரும்பலாம். ஆனால் இப்போது நான் வெள்ளை பந்து வடிவத்தை மட்டுமே பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -