கிரிக்கெட் வீரர்களில் அதிக உயரம் கொண்ட 6 கிரிக்கெட் வீரர்கள்

0
3154
Tallest Cricketers

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் ஒரு வீரருக்கு திறமையைத் தாண்டி ஒரு சில விஷயங்கள் தேவைப்படும். ஃபிட்னஸ், ஸ்டமினா என்ன ஒரு சில விஷயங்கள் ஒரு நல்ல கிரிக்கெட் வீரருக்கு அடையாளமாக பார்க்கப்படும்.

அதில் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு உயரும் மிகப்பெரிய அட்வான்டேஜ் ஆக அமையும். மற்ற பந்துவீச்சாளர்களை விட உயரமான பந்துவீச்சாளர்கள் மிக வேகமாக பந்துகளை வீசுவார்கள். அப்படி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிக உயரமான கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்

1. முகமது இர்ஃபான்

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த கிரிக்கெட் வீரரின் உயரம் 7 அடி ஒரு அங்குலம் ஆகும். 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விளையாட தொடங்கினார். தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதை கண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் கமிட்டி இவரை டெஸ்ட் போட்டிகளில் 2013ம் ஆண்டு விளையாட வைத்தது.

இவர் மொத்தமாக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளையும், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளையும் அதேபோல பத்து டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

2. ஜோயல் கார்னர்

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடிய ஒரு தலைசிறந்த வீரர் அவர். இவரை எல்லோரும் செல்லமாக பிக் பர்ட் என்று தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு இவர் உயரமாக இருப்பார். இவருடைய உயரம் சுமார் 6 அடி 8 அங்குலம் ஆகும்.

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளையும் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 148 விக்கெட்டுகளையும் இவர் பெற்றிருக்கிறார். குறிப்பாக யார்க்கர் வீசுவதில் இவர் ஆகச்சிறந்த பாலராவார்.

1979ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் வீசிய பந்து வீச்சை தற்போது வரை எவராலும் வீச முடியவில்லை. ஒரு உலக கோப்பை இறுதி போட்டியில் 39 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. கைல் ஜேமிசன்

Kyle Jamieson

நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த ஜேமிசன், தற்போது அவ்வணியின் ஓர் முக்கிய அங்கமாக விளங்குகிறார். 6’8 உயரம் இவரது பந்துவீச்சில் கூடுதல் பலம். உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்திய அணிக்கு எதிரான அட்ஸ்ட் போட்டியிலும் மிகச் சிறப்பாக பந்துவீசி உள்ளார். உலகத் தரம் வாய்ந்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

4. ப்ரூஸ் ரெய்டு

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் உயரத்தில் 6 அடி 8 அங்குலம். இவர் பல இஞ்சுரி காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் வெகு சீக்கிரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்.
விழுப்புரம் இவர் மொத்தமாக 27 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். மேலும் 61 ஒருநாள் போட்டிகளில் இவர் மொத்தமாக 63 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. கர்ட்லி ஆம்புரோஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய ஒரு சரித்திர நாயகன் தான் இவர். இவரை எல்லோரும் செல்லமாக ஜெண்டில் ஜெயன்ட் என்று தான் அழைப்பார்கள். என்னுடைய உயரம் 6 அடி 7 அங்குலம் ஆகும்.

98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இவர் மொத்தமாக கைப்பற்றிய விக்கெட்டுக்களின் எண்ணிக்கை 405 ஆகும். ஐசிசி வெளியிடும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் இவர் வெகுகாலமாக நம்பர் ஒன் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அல்லாமல் ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 176 போட்டிகளில் விளையாடி 225 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

6 ஸ்டீவன் பின்

Steve Finn Test
(Photo by Ryan Pierse/Getty Images)

6 அடி 7 அங்குலம் உடைய இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 2010 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தொடங்கினார். அதன் பின்னர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தனிச்சிறப்பு தொடர்ச்சியாக 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுவார். இவர் மொத்தமாக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளையும் 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளையும் அதேபோல் 21 டி20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்.