“டேலண்டான பிளேயர்.. இவரை யூஸ் பண்ணாம உலக கோப்பையில பெரிய விலை கொடுக்க போறிங்க!” – கோச் WV.ராமன் எச்சரிக்கை!

0
9741
Raman

இந்திய அணி உலகக் கோப்பைக்கு முழுதாக தயாராகி நிற்கிறது. எந்த அளவுக்கு தயாராகி இருக்கிறது என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக வலிமையான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறது.

இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ் ஆகிய வீரர்கள் மூன்றாவது போட்டிக்கு அணிக்குள் வருகிறார்கள்.

- Advertisement -

இவர்கள் நால்வருமே நாளைய போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கில், கே.எல்.ராகுல் சர்துல் தாக்கூர், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். நாளை பும்ரா, சிராஜ் இருவரும் விளையாடலாம்.

இந்த நிலையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், காயமடைந்து விளையாட முடியாமல் இருக்கும் அக்சர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.

இது மட்டும் இல்லாமல் அஸ்வின் உடன் சேர்த்து அவரைப் போலவே பந்து வீசும் வாஷிங்டன் சுந்தரையும் அணி நிர்வாகம் அணிக்குள் கொண்டு வந்தது. மேலும் இவரை அவசர அவசரமாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்து விளையாடும் 11 பேர் கொண்ட அணியிலும் சேர்த்தது. ஆனால் அவருக்கு அதற்கடுத்து வாய்ப்பு தரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறும் பொழுது ” நாம் ஆல் ரவுண்டர் பற்றாக்குறை பற்றி பேசுகிறோம். ஆனால் நம்மிடம் வாஷிங்டன் சுந்தர் என்ற மிகத் திறமையான ஆல் ரவுண்டர் இருக்கிறார். அவர் மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு என்ன நடந்தது? அவருக்கான சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை.

நம்மிடம் உள்ள வளங்களை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் கடினமான நேரங்களில் அவர்களிடமிருந்து நாம் சிறப்பான விஷயங்களை பெற முடியும்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தரமான வீரர்கள் விளையாடுவதை பார்த்தோம். மற்ற நாடுகள் அதே தொடரில் தேசிய அணிக்கு விளையாடிய வீரர்களை கொண்டு வந்து விளையாடினார்கள்.

மேலும் தற்பொழுது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இப்படியான அணிகளில் இருந்து ரேங்க் பட்டியலில் நிறைய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் எங்களுடைய இந்திய தரப்பு ஏதாவது மனநிறையுடன் கவனக் குறைவாக இருந்தால், உலகக் கோப்பையில் பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்!” என்று கூறி இருக்கிறார்!