ஆசிய கோப்பை.. சவால ஏத்துக்குறேன் முதல்ல பேட்டிங் பண்றோம்.. ஷமி கிடையாது- ரோகித் சர்மா அதிரடியான முடிவு!

0
552
Rohit

இறுதியாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி டாஸ் மூலம் சற்று முன் துவங்கிவிட்டது. மழையின் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட தற்போதைய நிலையில் வானம் தெளிவாக இருக்கிறது!

பதினாறாவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்காக உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது போட்டி நாள் வந்ததோடு போட்டிக்கு டாஸ் போடப்பட்டு இந்தியா பாகிஸ்தான் போட்டி மழைக்கு நடுவே மிக எதிர்பார்ப்புகளோடு சற்று முன் துவங்கி இருக்கிறது. இந்திய அணி எப்படி அமையும்? யார் யாருக்கு வாய்ப்பு? என்பதற்கான விடைகள் தெரிந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வென்றார். வென்ற அவர் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் சமி நீக்கப்பட்டு சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். வானிலை கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அதிகம் யோசிக்க முடியாது. நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும். சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு எங்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. அதற்குப் பிறகு பயிற்சி மற்றும் ஆசிய கோப்பைக்கான சவால்களை எங்கள் வீரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த போட்டியில் என்ன சாதிக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

இது தரமான ஒரு எதிரணிக்கு எதிரான தரமான போட்டியாகும். ஒரு குழுவாக நாள் முடிவில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும். ஸ்ரேயாஸ் மற்றும் பும்ரா திரும்ப வருகிறார்கள். சமி இடம்பெறவில்லை சர்துல் வருகிறார். சுழற் பந்துவீச்சாளர்களாக ஜடேஜா மற்றும் குல்தீப் இருக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்!

ஆசியக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ட்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.