இந்த டி20 உலகக்கோப்பையில் இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் – இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேலஸ் கணிப்பு!

0
7971
Alex Hales

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் அக்டோபர் தொடங்கி நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

இது அல்லாது இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நமிபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, யுஏஇ மற்றும் அயர்லாந்து 8 அணிகள் தகுதி சுற்று போட்டிகளில் இரு குழுக்களாக பிரிந்து விளையாடுகின்றன. இதில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பையின் முக்கிய சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இதில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் ஒரு குழுவிலும், இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா பங்களாதேஷ் ஆகிய 4 அணிகள் ஒரு குழுவிலும் இடம் பெற்றுள்ளன. தகுதி சுற்று போட்டிகளில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்த இரண்டு குழுக்களிலும் இடம் பெறும். இந்திய அணி இடம்பெற்றுள்ள குழுவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடம்பெற அதிகபட்ச வாய்ப்பு உண்டு.

இந்த முக்கிய சுற்றுப்போட்டியில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வெல்லும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இறுதிப் போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் ஆகும்.

இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பிக்கிறது. முக்கிய சுற்றுப் போட்டிகளின் முதல் போட்டி அக்டோபர் 22-ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 23ஆம் தேதி மோதுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடித்து, பாகிஸ்தான் அணியுடனான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 40 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து மீண்டு வந்திருக்கும் அலெக்ஸ் ஹேலஸ் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அலெக்ஸ் ஹேலஸ் இதுபற்றி கருத்து கூறும் போது, ஆஸ்திரேலியா இங்கிலாந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இதில் உலக கோப்பை தொடரை நடத்தும் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் முன்னணியில் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் தன்னுடன் தொடக்க வீரராக களமிறங்க பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சரியானவர் என்று கூறியிருக்கிறார்.