டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு; நட்சத்திர பேட்ஸ்மேன் காயத்தால் விலகல்!

0
352
Pakistan

டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்காக இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிகள் தங்களின் 15 பேர் கொண்ட அணியை வரிசையாக அறிவித்தபடி வருகின்றன.

உலக கிரிக்கெட் அணிகளில் எல்லோருக்கும் முன்பாக இங்கிலாந்து அணியும், உலககோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் ஆஸ்திரேலிய அணியும் தங்கள் 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்து இருந்தன.

- Advertisement -

இதற்கு அடுத்து கடந்த திங்கள் கிழமை இந்திய அணியும், நேற்று பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் தங்களின் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்து இருந்தன. இன்று ஆப்கானிஸ்தான் அணியும் தங்களின் டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது.

தற்போது டி20 உலக கோப்பையில் முக்கியமான அணியான பாகிஸ்தான் அணி தனது 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை அறிவித்து இருக்கிறது. மிக முக்கியமாக பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூணாக இருந்த, பேட்டிங்கில் மூன்றாமிடத்தில் களமிறங்கிய பகர் ஜமான் காயத்தால் இடம்பெறவில்லை. அதேபோல் ஆசிய கோப்பையில் மொகமத் வாசிம் ஜூனியர் காயமடைந்து இருந்ததால் அணிக்குள் வந்த ஹசன் அலி நீக்கப்பட்டு இருக்கிறார்.

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி:

- Advertisement -

கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், இஃப்திகர் அகமத், குஷ்தில் ஷா, ஹைதர் அலி, சதாப் கான், மொகமத் நவாஸ், மொகமத் வாசிம் ஜூனியர், மொகமத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுவ், ஷாகின் ஷா அப்ரிடி, ஆசிப் அலி, ஷான் மசூத், உஸ்மான் காதிர்.

இந்த பாகிஸ்தான் அணியில் காயத்தால் ஆசிய கோப்பையில் விளையாடாமல் இருந்த நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி வந்திருப்பது அணியை மிக பலமாக்குகிறது. மேலும் ஷான் மசூத் நல்ல பேட்டிங் பார்மில் இருக்கிறார். மேலும் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் முகமது நவாஸ் ரூம் சதாப் கான் இருவரும் பேட்டிங்கில் அசத்த கூடியவர்கள். இதனால் டி20 கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தான் அணி மிக வலிமையான அணியாக தெரிகிறது. மேலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியான மிகச் சிறப்பான செயல்பாட்டை பேட்டிங்கில் வைத்திருக்கிறார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி மிக பலமான அணியாக இருக்கிறது!