டி20 உலகக் கோப்பை இந்திய அணி வெளியானது ; மேலும் ஆஸ்திரேலிய தென்னாப்பிரிக்க டி20 தொடர்களுக்கும் இந்திய அணி வெளியானது!

0
276
ICT

தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட் இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு, மிக முக்கியமான காரணம், கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறியதுதான்.

இதற்குப்பிறகு கேப்டன் பயிற்சியாளர் மாறி பொறுப்புகளுக்கு ரோகித் சர்மா ராகுல் டிராவிட் வந்தார்கள். இவர்கள் இருவரும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து அதற்கு தேவையானவற்றை அணிக்குள் செய்துவந்தார்கள்.

- Advertisement -

இதற்காகப் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து பரிசோதனை செய்ததோடு, மூத்த வீரர்களையும் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து புதிய ஒரு அணியையும், புதிய ஒரு அணி கலாச்சாரத்தையும், புதிய ஒரு ஆட்ட அணுகுமுறையையும் எங்களது கூட்டணி உருவாக்கியிருக்கிறது என்று கூறலாம்.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது ரோகித் ட்ராவிட் கூட்டணி மீது அதிக விமர்சனங்களை தற்சமயம் உருவாக்கியுள்ளது. மேலும் அடுத்து ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா உடன் நடக்கும் டி20 தொடர்கள் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்படியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் நிலவுகிறது.

இப்படியான நிலையில் தற்போது இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி விபரம் ;

ரோகித் சர்மா ( கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன் ), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், ஹர்சல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சாகல். அஸ்வின்.

ரிசர்வ் வீரர்களாக டி20 உலகக் கோப்பை அணியில் சமி, ஸ்ரேயாஸ், ரவி பிஷ்னோய், தீபக் சஹர் ஆகியோர் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா ( கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன் ), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமத் சமி, தீபக் சஹர், ஹர்சல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சாகல். அஸ்வின்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :

ரோகித் சர்மா ( கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன் ), விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங், ஹர்சல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹர், சாகல். அஸ்வின்.