டி20 உலகக் கோப்பை 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

0
159
Afghanistan

வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள கிரிக்கெட் அணிகள் தங்களின் உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டு வருகின்றன.

முதன்முதலில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் தங்களின் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை வெளியிட்டன. இதற்கு அடுத்து திங்கட்கிழமை இந்தியா தனது டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டது. நேற்று பங்களாதேஷ் வெஸ்ட் இண்டீஸ் தங்களின் டி20 உலகக் கோப்பை அணியை வெளியிட்டன.

- Advertisement -

இந்த நிலையில் சிறிய அணியாக இருந்தாலும் இன்று டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய எழுச்சியை கண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 15 பேர் கொண்ட தங்களின் டி20 உலகக் கோப்பை அணியை வெளியிட்டு இருக்கிறது. ஆசிய கோப்பையில் விளையாடிய 5 வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி:

கேப்டன் முகமது நபி, துணை கேப்டன் நஜிபுல்லா சட்ரண், ரகமனுல்லா குர்பாஸ், அசமத்துல்லா ஒமர்ஸாய், டார்விஸ் ரசூலி, பரீத் அகமத் மாலிக், பசல் பருக்கி, ஹஸரத்துல்லா ஸசாய், இப்ராஹிம் சட்ரன், முஜிபூர் ரகுமான், நவீன் உல் ஹக், கியாஸ் அகமத், ரஷித் கான், சலீம் சபி, உஸ்மான் கனி.

- Advertisement -

இந்த ஆப்கன் அணி தேர்வு பற்றி தேர்வு குழு தலைவர் மாலிக்சாய் கூறுகையில் “அதிர்ஷ்டவசமாக காயத்தில் இருந்து டார்விஸ் ரசூலி குணமடைந்து இருக்கிறார். அவர் உலகக்கோப்பைக்கு கிடைப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஆப்கன் அணியின் நடுவரிசை பேட்டிங்கை பலம் ஆக்குவார் ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஆஸ்திரேலிய நிலைமைகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மேலும் எங்களின் பந்துவீச்சு துறைக்கு உத்வேகத்தை சேர்க்க, உயரமான வலது கை வேகப்பந்து வீச்சாளர் சலீம் சபியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.