டி20 உலக கோப்பை… ரிஷப் பண்ட்டா இஷான் கிஷானா?.. ராகுல் டிராவிட் ஆச்சரியப்படுத்தும் பதில்

0
173
Ishaan

இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை ஏறக்குறைய இந்திய அணி முடிவு செய்யப்பட்டு விட்டது என்று கூறலாம்.

இதில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் விளையாடுவது உறுதி. மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் இடம் யாருக்கு வழங்கப்படும் என்பது ஐபிஎல் தொடரில் முடிவு செய்யப்படும்.

- Advertisement -

இதேபோல் இன்னொரு இடம் இந்திய அணியில் இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது, அது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இடம். அப்பொழுது எதற்கும் ஐபிஎல் தொடர்தான் பதில் சொல்ல வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கான இடத்தில் இன்னும் ஒன்று கூட உறுதி செய்யப்படவில்லை என்பதுதான்.

தற்போதைய இந்திய அணியின் நிலவரத்தை வைத்து பார்க்கும் பொழுது மேல் வரிசையில் வந்து விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் தேவையில்லை என்பதாக தெரிகிறது. இல்லை ஒரு இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன், மாற்று துவக்க ஆட்டக்காரராகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இஷான் கிஷான் வருவார்.

இல்லை மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தேவை என்கின்ற நிலை இருக்கும் பொழுது, சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் இருக்கிறார்கள். கடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இவர்கள் இருவரும் இடம் பெற்று இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இன்னொரு பக்கம் கேஎல்ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் டி20 உலக கோப்பை அணிகள் இடம் பிடிப்பதற்காக கடினமாக தயாராகி வருகிறார்கள். கே.எல்.ராகுல் இதற்காக ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மேற்கொண்டு உடல் தகுதியை எட்டினால் அவரும் போட்டியில் இருப்பார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட்டிடம் கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது “எங்களிடம் சில விக்கெட் கீப்பிங் ஆப்ஷன்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரையும் பார்த்தோம். நீங்கள் தற்பொழுது கே.எல்.ராகுல் பற்றி கேட்கிறீர்கள்.

ஆனால் இந்தத் திட்டத்தில் இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே இருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் எல்லோரும் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள் அணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.