டி20 உலககோப்பை ஓபனர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யார்?.. பிசிசிஐ மாஸ்டர் மூவ்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
695
ICT

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த மாதம் பதினொன்றாம் தேதி துவங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட இந்த இந்திய அணியில் முக்கிய திருப்பமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் காயத்தின் காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் அவரது காயத்தின் தன்மை எந்த அளவில் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மூவரும் இடம்பெற்று இருக்கிறார்கள். மூன்று துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கின்ற காரணத்தினால், இரண்டாவது விக்கெட் கீப்பராக இன்னும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இசான் கிஷானை சேர்த்துக் கொள்ளாமல் கழட்டி விட்டு இருக்கிறார்கள்.

இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அதிரடியாக அவரையும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வுக்குழு கழட்டிவிட்டு இருக்கிறது.

- Advertisement -

இதன்மூலம் வருகின்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியின் முதல் இரண்டு துவக்க ஆட்டக்காரர்களாக வலது கை பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வால் இருவரையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்க்கிறது. மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் அணியில் தொடர்வார்.

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிய காரணத்தினால் அந்த இடம் திலக் வர்மாவுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் பினிஷர் ஆக ரிங்கு சிங் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா என இந்திய பேட்டிங் யூனிட் அமைவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது!