இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் எல்லா அணிகளுக்கும் முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது.
அதே சமயத்தில் இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பி வந்த காரணத்தினால், பேட்டிங் யூனிட் தொடர்பாக இருந்த சந்தேகங்கள் நீக்கப்பட்டன. ஏறக்குறைய பவுலிங் யூனிட்டும் எதுவென்று தெரிந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்கள் யார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரின் மூலமாக இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக பேச்சுகள் வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் பேட்டிங் செய்த விதம் இந்திய முன்னாள் வீரர்கள் தாண்டி வெளிநாட்டு முன்னாள் வீரர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கிறது.
மேலும் துருவ் ஜுரல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தது போல் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் இயல்பாகவே வெள்ளை பந்து டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன். எனவே திடீரென டி20 உலக கோப்பை இந்திய அணிக்கான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனுக்கான போட்டியில் அவர் நுழைந்து விட்டார்.
ரிஷப் பண்ட் டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து இந்தியாவில் நடைபெறும் பங்களாதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் துருவ் ஜுரல் இரண்டாவது விக்கெட் கீப்பராக சேர்க்கப்படுவதோடு, பிளேயிங் லெவனில் பேட்ஸ்மேன் ஆகவே சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விட்டதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரோகித் சர்மா இஷான் கிஷான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு தர மாட்டேன் என சொன்னாரா? – இந்திய முன்னாள் வீரர் விளக்கம்
தற்போதைய சூழ்நிலையில் அடுத்து வரவிருக்கின்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரல் பெயர் பரிசீலனைக்கு சேர்க்கப்படும் என்பதும், மேலும் ரிஷப் பண்ட் வந்தாலும் துருவ் ஜுரல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதோடு, விளையாடும் அணியிலும் இடம் பிடிப்பார் என்றும் பிசிசிஐ தகவல்கள் கூறுகிறது.