ஆர்சிபி சிஎஸ்கே போட்டியில் மழை வாய்ப்பு.. ரத்தானால் யாருக்கு ப்ளே ஆப்.. தோனி ஃபேர்வெல் சிறப்பாக நடக்குமா?

0
4073
IPL2024

ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் ஒவ்வொரு அணிகளும் 10 போட்டிகளை தாண்டிய பிறகு பிளே ஆப் வாய்ப்புகளுக்கான மோதல் மிகக் கடுமையாக இருக்கும். தற்போதும் ஐபிஎல் தொடர் இந்த நிலையை அடைந்திருக்கிறது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மே 18ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் மோதிக் கொண்டிருக்கும் முக்கிய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த முறை கோடைகால மழை மிகச் சிறப்பான நேரத்தில் ஆரம்பித்து இருப்பதாகவும், மே 15 முதல் சென்னை பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மழை பரவலாக பெய்யும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இத்தோடு பெங்களூரிலும் மே 15 முதல் பரவலாக பல இடங்களில் மழை பெய்யும் என்கின்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார். இதில் நல்லவேளையாக டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியப் போட்டியின் போது மழை குறுக்கீடு இல்லை. ஆனால் அதற்குப் பிறகு பெங்களூரைச் சுற்றிலும் மழை பெய்திருக்கிறது.

இந்த நிலையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மே 18ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் மழை குறிப்பிடுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறி இருக்கிறார்.

ஒருவேளை இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நடக்கவில்லை என்றால், ஆர்சிபி அணி 13 புள்ளிகள் உடன் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும். அதே சமயத்தில் சிஎஸ்கே அணி ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளின் போட்டி முடிவுகளுக்காக 15 புள்ளிகள் உடன் காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல்.. இந்த முறை கோப்பை இந்த டீமுக்குதான்.. இவங்கள ஜெயிக்கிறது கஷ்டம் – ஹர்பஜன் சிங் கணிப்பு

ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் இரண்டுக்கும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்றன. ஹைதராபாத் அணி தற்பொழுது 14 புள்ளிகள் லக்னோ 12 புள்ளிகள் எடுத்து இருக்கின்றன. எனவே ஹைதராபாத் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும், அல்லது லக்னோ ஒரு போட்டியில் ஆவது தோல்வி அடைய வேண்டும், அப்பொழுது சிஎஸ்கே அணி 15 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.