டி20 உலக கோப்பை.. ஹர்திக் பாண்டியா சிவம் துபே.. 2 பேருக்குமே வாய்ப்பு கிடைக்குமா?.. முழு அலசல்

0
119
Hardik

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடர் நாயகனாக மிதவேக பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் இரண்டு போட்டிகளில் ஆட்டம் இழக்காமல் இரண்டு அரை சதங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இரண்டு வட்டங்களிலும் பந்து வீச்சில் தலா ஒரு விக்கெட் என இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பேட்டிங்கை பொறுத்தவரை அவர் உள்ளே வந்து சில பந்துகளுக்கு பொறுமைக்காட்டி பின்பு முதல் ஆட்டத்தில் அதிரடி காட்டினார். இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகளம் சாதகமாக இருக்க, உடனுக்குடன் அதிரடியில் ஈடுபட்டார். இந்த வகையில் அவருடைய பேட்டிங் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது.

அதே சமயத்தில் அவருடைய பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் அதில் வேலை செய்து கொஞ்சம் வேகத்தை அதிகரித்து இருக்கிறார். மேலும் கையை பின்புறத்தில் வைத்து வீசக்கூடிய மெதுவான பந்து ஒன்றை புதிய வகையாக தனது பந்து வீச்சில் சேர்த்து இருக்கிறார்.

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றாலும், இவரும் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்கின்ற கருத்துகள் மிக வலிமையாக மாறியிருக்கின்றன. உண்மையில் இருவரையும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்ய முடியுமா?
என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஒரு விக்கெட் கீப்பர், ஜடேஜா, குல்தீப் யாதவ், சமி, பும்ரா என முதல் 11 வீரர்கள் விளையாடும் அணியில் வருவார்கள்.

இதற்கு அடுத்து மேலும் நான்கு வீரர்களாக வேகப்பந்து வீச்சு மாற்று வீரர் முகமது சிராஜ், சுழற் பந்துவீச்சு மாற்று ஆல் ரவுண்டர் அக்சர் படேல், இரண்டாவது விக்கெட் கீப்பர் என வருவார்கள்.

இப்படி மொத்தம் 14 இடங்கள் நிரப்பப்பட்டு விடும். மீதி ஒரு இடம் இருக்கும். இந்த இடத்திற்கு வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்க கண்டிஷனை வைத்து சுழற் பந்துவீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டர் திலக் வர்மா, சுழற் பந்துவீச்சு பவுலிங் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், இல்லையென்றால் முழு நேர ஸ்பின்னர் ரவி பிஸ்னாய் மூவரில் ஒருவரைதான் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை என்றால், நிச்சயம் சிவம் துபே இடம் பெறுவார் என்று நம்பலாம். இல்லையென்றால் அவருக்கான இடம் என்பது கொஞ்சம் கடினமாகவே இருப்பதாகத்தான் தெரிகிறது.