ஐபிஎல் சண்டை போதும்.. 2 நாளில் டி20 உலக கோப்பை வார்ம் அப் போட்டிகள்.. இந்தியாவின் முழு அட்டவணை

0
1109

இந்தியாவில் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு தயாராக உள்ளது.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி போட்டிகளில் ஈடுபட உள்ளன. வருகிற 27ஆம் தேதி முதல் தொடங்கும் பயிற்சி போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 27ஆம் தேதி கனடா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே தொடங்க உள்ள பயிற்சி போட்டி ஜூன் 1ஆம் தேதி வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் உடன் முடிவடைகிறது.

- Advertisement -

இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் மற்றும் இந்தியா, நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான பயிற்சி போட்டிகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் அமெரிக்காவில் மூன்று இடங்களிலும், வெஸ்ட் இண்டீசில் ஆறு இடங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஜூன் 1ம் தேதி தொடங்க உள்ள டி20 உலக கோப்பை முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா அணி கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது. அடுத்த நாளாக போட்டியை நடத்தும் மற்றொரு நாடான மேற்கிந்த தீர்வுகள் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொள்ள உள்ளன. இந்தத் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நான்கு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதிலிருந்து முன்னேறும் அணிகள் நாக் அவுட் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதில் ரோஹித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

இந்திய அணியின் முழு அட்டவணை

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய நாடுகளும் குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் குரூப் டி பிரிவில் பங்களாதேஷ், உகாண்டா, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நேபாள் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இதில் பயிற்சி போட்டியை இந்தியா முடித்தவுடன் ஜூன் 5ஆம் தேதி இந்தியாவின் டி20 உலக கோப்பை பயணம் நியூயார்க்கில் உள்ள நாசா கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக தொடங்குகிறது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் தோல்வி.. இந்திய அணிக்கு நடந்த நல்ல விஷயம்.. டி20 உலக கோப்பையில் ஜாக்பாட் அடித்தது

அதற்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 9ம் தேதி இதே நாசா கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவையும், 15ஆம் தேதி கனடா அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளன. ஜூன் 19ஆம் தேதி முதல் சூப்பர் 8 போட்டிகளும், இறுதிப் போட்டிகள் ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாசில் உள்ள பிரிட்ஜ் டவுனில் நடைபெற உள்ளது.