டி20 உலககோப்பை 2024.. இந்த இரண்டு அணிகளுக்கு தான் ஜெயிக்க அதிக வாய்ப்பு.. யுவராஜ் சிங் கணிப்பு

0
1503
Yuvraj

அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில் சேர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பையை இந்த இரண்டு நாடுகள் நடத்துகின்ற காரணத்தினால், நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதிப்பெற்று இருக்கின்றன.

மேலும் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 நாடுகள் பங்கு பெறுகின்றன. மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் இரண்டு சுற்றில் முன்னேறினால் மட்டுமே மூன்றாவதாக அரை இறுதிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் உலகக்கோப்பை நடக்கும் நேரத்தில் தகுதிச்சுற்று நடத்தாமல், ஏற்கனவே விளையாடும் அணிகள் யார் என்பது குறித்து தகுதிச்சுற்றுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தற்பொழுது 20 அணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

இதன் காரணமாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் ஒவ்வொரு அணிகளும், உலகக் கோப்பையை நோக்கி தங்கள் தயாரிப்புகளை தீவிரப் படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்களுக்கான தனித்திட்டங்களை உருவாக்குவதில் நேரம் செலவிடலாம்.

கடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் தகுதிப்பெற முடியாமல் போனது. இப்படியான நிலையில் உள்நாட்டில் நடக்க இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் நல்ல முறையில் தயாராகி வருகிறார்கள். தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து என மூன்று பெரிய நாடுகளை தங்கள் சொந்த நாட்டில் டி20 தொடரில் வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணியாக எந்த அணி இருக்கும் என்பது குறித்து, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் “எனக்கு இந்த விஷயத்தில் வேறு ஒரு கருத்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா வெல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இதுவரையில் எந்த ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. மேலும் அவர்கள் 50 ஓவர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் மிக நன்றாக இருக்கிறார்கள். அடுத்தபடியாக பாகிஸ்தான் அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!