டி20 உலககோப்பை 2024.. இந்திய அட்டவணை.. ஐசிசி வைத்த செக்.. 2 சுற்றுகள்.. முழு விவரம்!

0
532
ICT

கிரிக்கெட் உலகில் முதல் இடத்தில் இருக்கும் டி20 லீக் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் முடிந்ததும், ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

கடந்த முறைகளில் தகுதி சுற்று போட்டிகள் உலகக் கோப்பை தொடருக்கு முன்வாரத்தில் நடத்தப்படும். மேலும் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த முறை முன்கூட்டியே தகுதி சுற்று போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. மேலும் மொத்தமாக 20 அணிகள் பங்கு பெறுகின்றன. இதன் காரணமாக பழைய முறை போல் இல்லாமல் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 20 அணிகளும், ஏ பி சி டி என நான்கு பிரிவுகளாக, ஒரு பிரிவுக்கு ஐந்து அணிகளாக பிரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் மோதும். முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இப்படி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் எட்டு அணிகளும், நான்கு அணிகள் என இரண்டு குழுவாகப் பிரிக்கப்படும். இதில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இதிலிருந்து இறுதிப் போட்டி, அடுத்து சாம்பியன் அணி கண்டறியப்படும்.

இந்த முறை உலகக் கோப்பை தொடரில் எல்லா பெரிய அணிகளும் முதல் சுற்றை தாண்டி விடலாம். ஆனால் இரண்டாவது சுற்றுக்கு வரும்பொழுது அங்கு இருக்கும் 8 அணிகளும் வலிமையானதாகவே இருக்கும். எனவே இந்த இடத்தில் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். இதன் மூலம் டி20 உலக கோப்பையை வெல்வது என்பது மதிப்பு மிக்கதாக மாறுகிறது.

இந்திய அணி இடம் பெற்றுள்ள குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து, ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தான், ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா, ஜூன் 15ஆம் தேதி கனடா என நான்கு அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது!