“டி20 உலக கோப்பை 2024.. இந்த இரண்டு அணிகள்தான் இறுதி போட்டிக்கு வரும்” – கேசவ் மகாராஜ் கணிப்பு

0
323
Maharaj

தற்பொழுது இந்தியாவில் இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் நடுப்பகுதி வரையில் நடக்கிறது.

இதற்கு அடுத்து சிறிது இடைவெளியில் மார்ச் மாதம் இறுதியில் 17 வது ஐபிஎல் சீசன் துவங்குகிறது. மேலும் இந்த ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் இறுதியில் முடிவடைகிறது.

- Advertisement -

பிறகு உலகக்கிரிக்கெட் மீண்டும் சூடு பிடித்து, அமெரிக்கா மற்றும் பெஸ்ட் இன்டிஸ் மண்ணில் ஜூன் மத்தியில் இருந்து டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன. முன்பு போல் இல்லாமல், அரையிறுதி சுற்றுக்கு முன்பாக இரண்டு சுற்றுகள் நடைபெறுகிறது.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் 20 அணிகளும் நேரடித் தேர்விலும், தகுதிச் சுற்றின் மூலமாகவும் கடந்த மாதங்களிலேயே கண்டறியப்பட்டு விட்டது. முன்பு போல உலக கோப்பைக்கு முன்வாரத்தில் தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கவில்லை.

- Advertisement -

எனவே இதனால் இந்தத் தொடரில் பங்கு பெற இருக்கும் 20 அணிகளும் தங்களது தயாரிப்புகளை ஆரம்பித்துவிட்டன. மேலும் இந்த முறை நிறைய பெரிய அணிகள் மற்ற பெரிய அணிகளுடன் மோதுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. நடக்க இருக்கும் இந்த டி20 உலக கோப்பையில் எந்த இரண்டு நாடுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என தென் ஆப்பிரிக்கா அணியின் கேசவ் மகாராஜ் தன்னுடைய கணிப்பை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கேசவ் மகாராஜ் கூறும்பொழுது “உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் எப்பொழுதும் நாங்கள் தொடர்பு கொள் செல்கிறோம். இந்த முறை உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றுக்குப் பின்பு, எங்கள் உள்ளூர் மக்கள் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று கூறுவதைகேட்கிறேன்.

இதையும் படிங்க : “ரோகித் டிராவிட் சொன்னா போதும்.. இங்கிலாந்து மாதிரி அதைச் செய்ய தயாராக இருக்கோம்” – கேஎஸ்.பரத் பேச்சு

தற்பொழுது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் தரம் மிகவும் உயர்வானதாக இருக்கிறது. தற்பொழுது டி20 கிரிக்கெட்டில் சர்வதேச திறமைகள் வந்து கலந்து விளையாடும் பொழுது 200 ரன்களை துரத்துவது மிக எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. திறன்களின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா டி20 லீக் ஐபிஎல் தொடருக்கு மிகவும் அருகில் இருக்கிறது. மேலும் இந்த தொடருக்கு இது இரண்டாவது ஆண்டுதான்” என்று கூறி இருக்கிறார்.