டி20 உலக சாம்பியன் இங்கிலாந்தை மீண்டும் அடித்து தொடரை கைப்பற்றி அசத்தியது பங்களாதேஷ்!

0
2670
Ban vs Eng

இங்கிலாந்து அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது!

இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது!

- Advertisement -

இன்று டி20 தொடரின் இரண்டாவது போட்டி மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் கேப்டன் சகிப் அல் அசன் முதலில் பந்து வீசுவதென முடிவெடுத்தார்!

இதன்படி இங்கிலாந்துக்கு துவக்க வீரர்களாக இந்த முறை களம் கண்ட பில் சால்ட் 25, டேவிட் மலான் 5 ரன் என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து பென் டக்கெட் மட்டும் 28 ரன்கள் எடுத்தார். கேப்டன் பட்லர் வரை மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை தரவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 10 விக்கட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் மெகதி ஹசன் மிராஸ் நான்கு ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ரோனி டலுக்தர் தலா 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

அடுத்து ஹ்ரிடாய் 17, மெஹதி ஹசன் மிராஸ் 20 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் சகிப் அல் ஹசன் ரன்கள் ஏதும் இல்லாமல் அதிர்ச்சி அளிக்க ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற, கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த நஜிபுல் ஹுசைன் சான்டோ இந்தப் போட்டியிலும் பொறுப்பாக 47 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணியை வெற்றி பெற வைத்து தொடரைக் கைப்பற்றவும் முக்கியக் காரணமாக விளங்கினார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.