டி20 உலக சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது பங்களாதேஷ்!

0
4110
Ban vs Eng

இங்கிலாந்து தற்பொழுது பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் என இரண்டு தொடர்களில் விளையாடி வருகிறது!

முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முதல் இரண்டு போட்டிகளில் வென்று இங்கிலாந்து அணி கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி மீண்டு வந்து வெற்றியை பெற்றது!

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று சிட்டாகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானித்தது!

இதன்படி இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்க சால்ட் மற்றும் கேப்டன் பட்லர் இருவரும் களமிறங்கினார்கள். இந்த துவக்க ஜோடி ஆரம்பம் முதலில் நிலையாகவும் அதிரடியாகவும் விளையாடி பங்களாதேஷ் அணிக்கு நெருக்கடியைத் கொடுத்தது.

ஆட்டத்தின் பத்தாவது ஓவரின் கடைசி பந்தில் சால்ட் 35 பந்தில் நான்கு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி பத்து ஓவர்களில் முதல் விக்கட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. ஒன்பது விக்கட்டுகள் கைவசம் இருக்க அடுத்த 10 ஓவர்களில் குறைந்தது 100 ரன்கள் ஆவது இங்கிலாந்து எடுக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், மேற்கொண்டு 76 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆறு விக்கட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்க முடிந்தது. பங்களாதேஷ் தரப்பில் அசன் முகமது இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் 42 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்தார்!

- Advertisement -

இதற்கு அடுத்து களம் கண்ட பங்களாதேஷ் அணிக்கு இளம் வீரர் ரோனி தலுக்டர் 14 பந்தில் நான்கு பவுண்டரி உடன் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பத்து பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நஜிமுல் ஹோசைன் சாண்டோ மற்றும் அறிமுக வீரர் ஹ்ரிடாய் இருவரும் இணைந்து அதிரடியாக 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் உண்டாக்கினார்கள். இருவரும் முறையே 51 ரன்கள் மற்றும் 24 ரன்களில் ஆட்டம் இறந்தாலும் பங்களாதேஷ அணி ஆட்டத்தில் வலுவான முன்னிலையை பெற்றது.

இதற்கடுத்து கேப்டன் சாகிப் அல்ஹசன், அபிப் உசைன் இருவரும் சேர்ந்து 18 ஓவர்களில் பங்களாதேஷ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இங்கிலாந்து அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவி செய்தார்கள். கேப்டன் ஷாகிப் 24 பந்தில் ஆறு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார். அபிப் ஹூசைன் 13 பந்தில் இரண்டு பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை உள்நாட்டில் இங்கிலாந்து அணியிடம் பங்களாதேஷ் அணி இழந்து, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!