டி20 கிரிக்கெட்டே விளையாடாத ரெண்டு பேரை நேராக ஐபிஎல்-ல் இறக்கிய மும்பை இன்டியன்ஸ்!

0
1080
MI

ஐபிஎல் 16ஆவது சீசனின் நான்காவது போட்டி இன்று ஞாயிறு இரண்டாவது போட்டியாக பெங்களூர் மும்பை அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்ன சுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது!

இந்த போட்டிக்கான டாஸில் வென்ற பெங்களூரு கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ரஜத் பட்டிதார் காயத்தால் விளையாடாததாலும், ஹசரங்கா தற்போது இல்லாததாலும், இந்திய ஸ்பின்னர் கரண் ஷர்மா, நியூசிலாந்தின் ஸ்பின் ஆல் ரவுண்டர் பிரேஸ் வெல் இருவரும் பெங்களூர் அணியில் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

மும்பை அணியில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக மும்பை அணி நிர்வாகம் இதுவரை மாநில அணிகளுக்காக டி20 போட்டிகளில் விளையாடி இருக்காத இரண்டு இளம் வீரர்களை நேராக ஐபிஎல் போட்டியில் களம் இறக்கி இருக்கிறது.

ஒருவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான லெக் ஸ்பின்னர் நெகல் வகேரா. இவர் இடது கையில் பேட்டிங்கும் நன்றாக செய்யக்கூடியவர். இன்று கடினமான சூழ்நிலையில் மும்பை இருக்கும்பொழுது களமிறக்கப்பட்ட இவர் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் உடன் 21 ரன்கள் எடுத்தார். இவர் தனது பஞ்சாப் மாநில அணிக்காக ஐந்து டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார்.

இன்னொருவர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வரும் 25 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமத் அர்ஷத் கான். இவர் தனது மத்திய பிரதேஷ மாநில அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். இன்றைய போட்டியில் 9 பந்துகளை சந்தித்த இவர் ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

மும்பை அணி எப்பொழுதும் இளம் வீரர்களை தேடி எடுத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கும் அணியாகும். ஹர்திக் பாண்டியா ஜஸ்ட்பிரீத் பும்ரா ஆகியோரை இந்திய அணிக்கு மும்பை அணியை தந்தது. தற்பொழுது அதே பாதையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது!

மும்பை அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, இஷான் கிஷான், கேமரூன் கிரீன், சூரியகுமார் யாதவ், டிம் டேவிட் என யாருமே சரியாக விளையாடாத பொழுது 46 பந்துகளில் ஒன்பது பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 84 ரன்கள் குவித்து திலக் வர்மா அசத்த, மும்பை அணி 171 ரன்கள் எடுத்திருக்கிறது.