“டி20 கிரிக்கெட்டா? கோலி டி10 கிரிக்கெட் விளையாட வேண்டிய ஆளுங்க!” – சிஎஸ்கே வீரர் ஆச்சரிய பேச்சு!

0
213
Virat

நாட்கள் கணக்கே இல்லாமல் விளையாடப்பட்ட இன்று டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பல வடிவங்கள் எடுத்து, உலகின் பல நாடுகளுக்கும் பரவி, மிகப்பெரிய ரசிகர் பலம் கொண்ட வணிகரீதியாக வெற்றியடைந்த விளையாட்டாக உருவெடுத்து இருக்கிறது!

கிரிக்கெட்டை பல நாடுகளுக்கும் கொண்டு சென்றதில், வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைய வைத்ததில், டி20 கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. குறைந்த ஓவர்கள் கொண்ட இந்த வடிவம் அறிமுகமான பின்புதான், கிரிக்கெட் நிறைய நாடுகளுக்கு போய் சேர்ந்தது.

- Advertisement -

ஏன் டி20 கிரிக்கெட் நிறைய நாடுகளுக்கு சென்றது என்றால், எந்த அளவிற்கு கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு குறைவான சவால்கள்தான் இருக்கும். அதே அளவிற்கு குறைவான திறமைகள் இருந்தால் போதும். வலிமையான கிரிக்கெட் அடிப்படையை உருவாக்குவதற்கு நீண்ட காலம் செலவிட வேண்டியது கிடையாது. மேலும் சரியான நேர அளவில் நடைபெற்று முடிவதும் முக்கியத்துவமானது. இதனால் டி20 கிரிக்கெட் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

அதே சமயத்தில் கிரிக்கெட் இன்னும் தன்னை குறுகிய வடிவத்திற்கு தகவமைத்துக் கொண்டு இருக்கிறது. டி20 கிரிக்கெட் போலவே தற்பொழுது டி10 கிரிக்கெட் வடிவம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கான தொடரை அபுதாபி சில ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டது. அந்தத் தொடர் முடிவடைந்ததும் உடனே டி 10 லீக் நடத்தப்பட்டது. இது கலந்து கொண்ட ஆறு அணிகளுக்கு ராபின் உத்தப்பா, கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் ஆகிய நான்கு இந்திய வீரர்கள் கேப்டன்களாக இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த கிரிக்கெட் வடிவம் குறித்து பேசி உள்ள முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா இதில் விராட் கோலி பற்றி கூறும் பொழுது ” நான் இந்த வடிவத்தில் நிச்சயமாக விராட் கோலி பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகிறேன். அவர் அப்படி விளையாடும் பொழுது இந்த கிரிக்கெட் வடிவத்திற்கான மதிப்பு இன்னும் கூடும். நம் வாழ்க்கையில் பார்த்த மிகச்சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். இந்த வடிவத்தில் அவர் விளையாடுவதின் மூலம், தனது சொந்த பேட்டிங்கில் பல வித்தியாசமான அம்சங்களை கண்டுபிடிப்பார் என்று நம்புகிறேன்.

டி10 கிரிக்கெட் இங்கு நிரந்தர வடிவமாக தங்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். இது கிரிக்கெட்டின் வித்தியாசமான ஒரு அம்சத்தை நமக்கு காட்டக்கூடிய வடிவமாக இருக்கும். எனவே ஒரு கட்டத்தில் இந்தியாவிலும் இந்த வடிவம் அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச நட்சத்திர வீரர்கள் இந்த வடிவத்தில் விளையாட வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!